பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

மேலும் திருவாசகத்திற்கு உரை சொல்லும்படி மணிவாசகரைக் கேட்டபோது, அதன் பொருளாக விளங்குபவன் தில்லையில் நடம்புரியும் திருச்சிற்றம்பலவனே என்று அவனையே சுட்டிக் காட்டி நின்றார் என்பதும் கர்ண பரம்பரை வழக்காக நாம் தெரிந்திருக்கிறோம்.

தில்லையில் வித்தகனார் விளையாடலைக்கண்டு பரவசம் அடைந்த மணிவாசகர், பின்னர் பலநாள் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் குலாப்பத்து, திருப்பதிகம், கோயிற்பதிகம், கீர்த்தித் திருஅகவல், திரு அண்டப்பகுதி, போற்றித்திருஅகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருஉந்தியார், திருத்தோணோக்கம், திருப்பூவல்லி, திருப்போன்சல் முதலியவற்றைப் பாடினார். அன்னைப் பத்து, கோத்தும்பி, குயிற்பத்து, தசாங்கம், அச்சப்பத்து இவைகளும் இங்கு எழுந்தவையே, இவைகளைப் பற்றி எல்லாம் விரிவாகப் பேச காலமோ நேரமோ இடந்தராது.

தில்லையிலே ஆனந்தக் கூத்தருடைய தாண்டவத்திலே ஈடுபட்டு அனுபூதி பெற்று அசைவற்று நின்றிருக்கிறார். இதை, அறியாத, மெய்க்காவலர் இவரைக் கனக சபையை விட்டு கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொற்களை இவர் செவி ஏற்கவில்லை. சிவானந்தப் பிரகாசத்தில் திளைத்து நின்று சிவசிவ என்றே குரல் கொடுத்திருக்கிறார்.

அதன்பின் மோனநிலை கலைந்து, கோயிலை வலம் வரும்போது, கீர்த்தத்திருவகவல், திரு அண்டப்பகுதி, போற்றித் திரு அகவல் ஆகிய மூன்று அகவல்களையும் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார். அதனால்தான் இன்னும் சைவத் தமிழ் உலகம், மக்கள் திருக்கோயிலில் வலம் வரும்போது வீண்பேச்சும் சழக்குரையும் பேசாது இவ்வகவல்களையே பாராயணம் செய்து கொண்டே