பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

அல்லவா இந்த வைத்தியர் செய்கிறார். அந்த சொக்கருக்கும், இந்தச் சொக்கருக்குமே ஒரு போட்டிதான். அந்த சொக்கர் ஒரு போட்டியில் தோற்று விடுகிறபோது, இந்தச் சொக்கர் இன்னொரு போட்டியில் வெற்றியல்லவா பெற்று விடுகிறார்! யார் எப்படிப் போனால் என்ன? தமிழர்களுக்கு ஒரு நல்ல பாட்டு கிடைத்துவிடுகிறது.

- அக்கோன்

பிறவாமற் காப்பான்
பிறந்தவரை மண் மேல்
இறவாமற் காப்பான் இவன்

என்னும் அடிகளை எத்தனை தரம் பாடிப்பாடிப் பார்த்தாலும் கொஞ்சமும் அலுக்கிறதில்லை. அந்தப் பாட்டு அவ்வளவு சுவையுடையதாக இருக்கிறது.

இந்தப் பாட்டை ஒரு நாள் ஆயிரத்து ஓராம் தடவையாக மனத்துக்குள்ளேயே நான் பாடிக் கொண்டிருந்தேன்.சமீபத்தில் நான் கோயம்புத்துர் தமிழ் விழாவிற்குச் சென்றிருந்த போது. அப்போது ஒரு நண்பர், பக்கத்தில் உள்ள பேரூருக்கு வருகிறீர்களா? என்று கூப்பிட்டார். கூப்பிட்டவர் நல்லதொருகாரும் வைத்திருந்தார். உப்புச் சப்பில்லா திருந்த அந்தத் தமிழ் விழா நிகழ்ச்சிகளைவிடக் கார் சவாரி கொஞ்சம் குஷாலாய் இருக்குமல்லவா என நினைத்து சரி என்றேன். காரிலும் போய் ஏறிக்கொண்டேன். கோயம்புத்துருக்கு மேற்கே மூன்று மைல் தூரத்திலுள்ள போரூர் என்னும் மேலைச் சிதம்பரம் போய்ச் சேர்ந்தோம். அங்குள்ள பட்டீசர் கோயிலின் கோபுரவாசலுக்குத் தெற்கே கொண்டுபோய்க் காரை நிறுத்தினோம். காரைவிட்டு இறங்கியதும் ஜட்கா வண்டி நிலையத்தையும், அதையொட்டிக் கல்லால் கட்டிய மேடையையும் பார்த்தோம்.