பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

உற்சவ மூர்த்திகளையும் கண்டு தரிசித்தோம். இதன் பின் கிழக்கே பார்க்கத் திரும்பினோம். ஒரு சிறு வாயில் வழி யாக ஒரு பெரிய மண்டபத்துக்குள்ளேயே நுழைந்தோம்.

அதுதான் வெள்ளி மன்றம் என்றார் நண்பர். அங்கே தான் ஆனந்த நடராஜர் கோயில் கொண்டிருக்கிறார், ஆட வல்லான் என்ற பெயரோடு. அப்பெருமானை இன்று அலங்கரித்திருக்கிற முறை, அந்தஅற்புத மூர்த்தியை ஏதோ கேலி செய்வதாகவே இருக்கிறது. இரண்டு காதிலும் சுளகு அகலத்தில் வெள்ளியால் காதணி செய்து வைத் திருக்கிறார்கள். இது அந்த அற்புத மூர்த்தியின் அழகை அடியோடு கெடுக்கிறது. இதோடு விட்டாலுங்கூடப் பரவாயில்லை. ஆடை உடுத்துகிறோம் என்று சொல்லி இரண்டு கால்கள் நான்கு கைகள் எல்லாவற்றிக்கும் 'பாண்டேஜ்" போட்டது போல் வரிந்து வரிந்து சுற்றி யிருக்கிறார்கள். மேலும் என்ன என்ன அலங்காரங்களோ செய்து அந்த மூர்த்தியை அவனிருக்கும் வண்ணத் திலேயே கண்டு வணங்க வகையில்லாது செய்திருக் கிறார்கள். இத்தனை கூத்துக்கும் ஆளாக்கியிருக்கிறார்கள், அந்த ஆனந்தக் கூத்தனை.

இந்த ஆடவல்லானையும் அருட்சக்தியையும் மானசீக மாகவே கண்டு வணங்கி விட்டு வெளியே வந்தால் இத்தனை நேரம் சுற்றியதன் பலனும், இத்தனை சிரமம் எடுத்து இங்கு வந்ததன் பலனும் கைவரப் பெறுகிறோம். ஆடவல்லான் மூலத்தானத்துக்கு முன்னுள்ள சபா மண்டபம் நிரம்பவும் அழகு வாய்ந்தது. அந்த மண்டபம் 94 டி நீளமும் 38 அடி அகலமும் 16 அடி உயரமும் உடையது. 36 தூண்கள் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன.

முன் வரிசையில் இருக்கும். எட்டுத் தூண்களிலும் எட்டு அற்புதமான உருவங்கள், சிற்பக்கலையின்