பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

121

வெற்றிகள். அழகு செய்கின்றன. ஆகுவாகனத்தில் அமர்ந்துள்ள ஐங்கரன் ஒரு தூணில் என்றால் வீறு முகமயில் மீது விளங்கும் ஆறுமுகன் எதிர்த்த துணில்; கனல் உமிழ் கண்ணோடு காட்சி கொடுக்கும் அக்கினி வீரபத்திரனும் அகோர வீரபத்திரனும் இரண்டு துணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். யானையை உரித்துத் தமது திருமேனியில் போர்வையாகப் போர்த்திக் கொண்ட கிருத்திவாஸ்ன் ஒரு தூணில் என்றால், தாருகாவனத்து முனிவர் பத்தினிகளின் கற்பு நிலையைச் சோதிக்க, நிர்வாணமாய் மானும் மழுவும் இளமதியும் திருவோடும் சிறந்திலங்க பிட்சாடனக் கோலம் தாங்கிய பிஞ்ஞகன் ஒரு தூணிலே காட்சி கொடுக்கிறான்.

நடனக் கலையில் இந்த அகிலத்திலேயே தனக்கு நிகர் ஒருவரும் இல்லை என்னும் அகந்தையுடன் ஆடல் புரிந்த அந்த ஆலங்காட்டுக் காளியின் கோலச்சிலைக்கு எதிரிலேயே, அவள் கர்வம் அடங்க, தாளொன்றால் பாதாளம் ஊடுருவ, மற்றைத் தாளொன்றால் அண்டம் கடந்து நிற்கும் அந்த அற்புத ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும் நிற்கிறான். இந்தச் சிலைகளில் ஒவ்வொன்றும் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உடையதாய் ஒரே கல்லில் சிற்றுளி வேலையின் நயமெல்லாம் தெரியச் செதுக்கப் பட்டிருக்கிறது.

இந்த சிற்பங்களைச் செதுக்கியவன் சிம்மனாச்சாரி என்ற சிற்பி என்றும், இந்த அற்புத மண்டபத்தைக் கட்டி அங்கே இத்தகைய அதி அற்புதமான சிற்ப உருவங்களையும் நிருமாணித்தவர் கி.பி. 1625 முதல் 1659 வரை மதுரையில் அரசாண்டதிருமலை நாயக்கருடைய சகோதரரான அளகாத்திரி நாயகர் என்றும் வரலாறு கூறுகிறது.

இந்தச் சிற்ப உருவங்கள் எட்டையும் பார்ப்பதற்கென்றே கோயம்புத்துருக்குப் போகலாம். அங்கிருந்து