பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

127


கதை இத்துடன் முடிந்து விடுகிறதா இல்லை. பிருங்கியின் பிடிவாதம் அப்போதும் தணியவில்லை வண்டு உருவெடுத்து. அந்த அம்மையப்பரது உடலை, அதன் நடுப்பாகத்தில் துளைத்து, அம்மையை, அம்மை அமர்ந்திருக்கும் பாகத்தை, வலம் வராமலேயே வெளிவந்து விட்டார்.

பின்னர் தன் உடலையே உதறிவிட்டு எலும்புருவில் என்றும் இறைவன் திருவடி அகலாது நின்று விட்டார். இந்தக் கதையிலும் ஓர் உண்மை. உலகவாழ்விலே பந்த பாசங்களிலேயே ஈடுபடாது, பற்றற்றான் பற்றினை மட்டும் பற்றி நிற்பவர்கள் அம்மையின் அருளுக்குப் பாத்திரர் ஆக வேண்டும் என்பதில்லை என்பது தெளிவாக விளக்கமுறுகின்றது.

இப்படியெல்லாம் தான் இறைவனுக்குப் பல்வேறு உருவங்களையும் அந்தந்த உருவங்களுக் கேற்ற முறையில் கதைகளையும் கற்பனைப் பண்ணியிருக்கிறார்கள். அன்றையத் தமிழர்கள். ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றுமில்லாத இறைவன் இப்படித்தான் ஆயிரம் திரு நாமங்களுடனும், இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகியிருக்கிறான் மனிதனது கற்பனையிலே.

இப்படிக் கற்பனை செய்ததையெல்லாம் கல்லிலும், செம்பிலும் வடித்தெடுத்திருக்கிறார்கள் நம் நாட்டுச் சிற்பிகள். அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே இன்று நமது தமிழ் நாட்டுக் கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன. மனிதன் கற்பனையோடு கலையும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது. அர்த்த நாரியின் சிலை அநேகமாய் எல்லா சிவன் கோயில்களிலும் இருக் கும். பொன்னியின் செல்வன் ராஜராஜன் காலத்துக்கு முன் எழுந்த கோயில்களில் எல்லாம் கர்ப்பக்கிருஹத்திற்கு