பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

133

குமாரனிடத்தில் அளவில்லாத பிரேமை. அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிடுகிறார்கள் இருவரும். பார்த்தார் பிள்ளையார். ஒரு வேலை செய்ய நினைத்தார். மாறி மாறி முத்தமிடும் தாயும் தந்தையும் ஒருங்கே முத்தமிட முனைந்த நேரத்திலே சடக்கென்று தன் முகத்தைப் பின்னாலே இழுத்துக் கொள்கிறார்.

அந்த நேரத்திலே பரமசிவனது உதடுகள் பார்வதி தேவியின் அதரங்களிலே பொருந்தின. லோகமாதாவும் தந்தையுமே ஒருவரைஒருவர் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். பிள்ளையாரோ, 'என் வேலை எப்படி! என்று கேட்பவர் போல இருவரையும் பார்த்து ஒரு சிறு நகை செய்கிறார். தாயும் தந்தையும் "பயல் பொல்லாத பயல்" என்று சொல்லி, பிள்ளையை - பிள்ளையாரைத்தான் - கட்டி அனைத்துக் கொஞ்சுகிறார்கள். இதைத்தான் நந்திக்கலம்பக ஆசிரியர்,

வார்ப்புரு:Bock center


என்ற காப்புச் செய்யுளாகப் பாடி விட்டார். எப்படி இருக்கிறது, எல்லாத் தெய்வங்களுக்கும் முன்னவனாய் முன்னிற்கும் பிள்ளையாரின் சிரிப்பு. இப்போது தெரிகிறது நமது ஹலிபாக்ஸ் பிரபு யாரிடம் டியூஷன் படித்திருக்க வேண்டும் என்று. சரியான இடம் பார்த்துத்தான் அவரும் 'தேங்காய்தட்டி'யிருக்கிறார்.