பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

153

தில் வேளாளர் தெருவில் நாடார், தேவர் முதலிய பிற்பட்ட சமூக மக்களின் கல்யாண ஊர்வலம் வருதல் கூடாது என்று எழுத்தில் இல்லாத ஒரு சட்டம். அந்தக் கிராமத்தில் இந்தக் கெடுபிடி இருப்பதைப் பலர் விரும்பவில்லை.

அந்தக் கிராமம் எந்தப் போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் இருக்கிறதோ அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சப் - இன்ஸ்பெக்டராக வருகிறார். அவரது ஆட்சிக்காலத்திலே அக்கிராமத்தில் உள்ள கெடுபிடியைத் தகர்த்து எறிந்து விட வேண்டும் என்று எண்ணினர் நாடார் சமூகத்தினர். அவர்களது இனத்தில் ஒரு திருமணம் நடக்கிறது. அத்திருமண விழாவன்று மணமக்களைப் பல்லக்கில் ஏற்றி அந்த வேளாளர் தெரு வழியாக ஊர்வலம் நடத்துவது என்று திட்டமிடுகின்றனர். ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டிருப் பதை வேளாளரும் தெரிந்து கொள்கின்றனர்.

அப்படி வந்தால் நேரில் நின்று தடுக்க முடியா விட்டாலும் மறைமுகமாகவாவது தடுப்பது என்று தீர்மானிக்கின்றனர் அவர்கள். நாடார் சமூகத்தினரும் அப்படித் தடுத்தால் கலகம் செய்வது என்று தீர்மானித்து அதற்குரிய கம்பு அரிவாள்களையும், பல்லக்கிலேயே எடுத்து வைத்துக் கொண்டு ஊர்வலம் புறப்படுகின்றனர். சப்இன்ஸ்பெக்டரும் தன் கீழ் உள்ள ஏட்டு முதலியவர் களுக்கு தக்க உத்தரவுகள் போட்டு விட்டு அவர் மட்டும் லீவ் எடுத்துக் கொண்டு வெளியூர் சென்று விடுகிறார். மணமக்கள் ஊர்வலம் பல்லக்கில் நடக்கிறது.

வேளாளர் எல்லாம் தங்கள் தங்கள் வீடுகளியே பதுங்கிக் கொள்கின்றனர். வேளாளர் தெருவின் நடுப்பகுதியில் ஒரு பந்தல் போட்டிருக்கிறது. அதுவரை வந்து விட்டனர். திருமண ஊர்வலத்தை நடத்திக் கொண்டு

ஆ.பெ.அ.நெ-11