பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

155

கலெக்டராக மாற்றியிருப்பதாக சர்க்காரிலிருந்து ஒரு தந்தி வருகிறது. தந்தி வெள்ளிக்கிழமை வந்தது. திங்கட் கிழமையன்று சார்ஜ் கொடுத்து விட்டு, புதன் கிழமையன்று நான் தலைச்சேரி போகவேண்டும்.

இந்த நிலையில் இந்த வழக்குகளை, எனக்குப் பதிலாக வருகிற மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டுப் போவதா, இல்லை, தீர்ப்புக் கூறிவிட்டே செல்வதா என்பது பிரச்சனை. வழக்கை நடத்துகிற வக்கீல் களுக்கு என் நல்லெண்ணத்தில் ஒரு நம்பிக்கை. இருதரப்பு வக்கீல்களும் என்னைச் சந்தித்து, "இந்த வழக்குகளை நீங்கள் ஒரு வருஷகாலமாக விசாரித்திருக்கிறீர்கள்." நீங்களே 'பைசல்' செய்து விட்டுப் போனால் நல்லது - என்று தெரிவித்துக் கொண்டார்கள். எனக்கும், 'அது சரி' என்றே பட்டது. உடனே வேலையோடு வேலையாக இரண்டு வழக்குகளிலும் இரவு பகலாக இருந்து தீர்ப்பு எழுதினேன்.

என்னுடைய எண்ணத்தில் இரண்டு கட்சிக்காரர்களுமே கலகத்திற்குக் காரணம் என்றாலும், நாடார் சமூகத்தினர்தான் கலகத்திற்கு வித்திட்டவர்கள். அவர்களில் முதன்மையாக இருந்து கலகத்திதைத் தூண்டி நடத்தியவர்களுக்குக் கொஞ்சம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அப்படியே கலகம் நடப்பதற்கு முக்கிய காரணஸ்தராக இருந்த ஒன்பதின்மருக்கு ஆளுக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை என்றும், மற்றவர்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரூபாய் நூறு அபராதம் என்றும் தீர்ப்பு எழுதி, தீர்ப்பை எடுத்துக் கொண்டு திங்கட்கிழமை காலை கோர்ட்டிற்கு வந்தேன்.