162
ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
னாய் இருப்பான், என்றெல்லாம் காண்பதற்கோ, அல்லது பிறருக்குக் காட்டுவதற்கோ அவன் அருள் வேண்டும். தம்பி! அந்த அருளையே கண்ணாகக் கொண்டு கண்டால் அல்லவா காண முடியும். பிறருக்கு காட்டவும் முடியும்.
அந்த அருள் இல்லாமல் அவனைக் காணவும், பிறருக்குக் காட்டவும் முடியாது தம்பி!" என்று முடித்தார் அவர் பேச்சை, ஏது! பெரியவர் பெரியவர் தான் என்று நினைத்த போது.
- மைப்படிந்த கண்ணாளும் தானும்
- கச்சி மயானத்தான், வார் சடையான்
- என்னின் அல்லான்
- ஒப்புடையன் அல்லன், ஒருவன் அல்லன்
- ஒரூரன் அல்லன், ஓர் உவமன் இல்லி
- அப்படியும், அந்நிறமும், அவ்வண்ணமும்
- அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்
- இப்படியன், இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
- இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே
- மைப்படிந்த கண்ணாளும் தானும்
என்ற பாட்டு திரும்பவும் திரும்பவும் என் நாவில் தவழ்ந்தது. பாட்டைப் பாடிக்கொண்டே பெரியவருடன் கொஞ்ச தூரம் நடந்து சென்றேன். இருவரும் பக்கத்தில் உள்ள கோயிலுள் புகுந்தோம். புகுவதற்கு முன், கோயிலுக்குள் போக வேண்டுவது அவசியம்தானா என்றேன். இந்நில உலகினில் நிலை பெற்றிருப்பதற்கு, மனதை ஒரு நிலைப்படுத்தி எல்லாம் வல்ல இறைவனை, எங்கும் நிறைந்த இறைவனை வணங்குவதற்கு 'கோயில் குளம், பூசை புனற்காரம் எல்லாம் வேண்டுமா' என்றேன். பெரியவரோ பதில் பேசவில்லை. ஆனால் பாட ஆரம்பித்து விட்டார்.