பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பறவையும் விலங்கும்
பரமன் உருவில்


குற்றாலத்தில் குரங்குகள் எல்லாம் கூடி ஒரு மகாநாடு நடத்தியது. ஒரு பெரிய சம்மேளனமே நடந்தது. அந்தச் சம்மேளனத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை. என்றாலும் நம் மூதாதையர் ஆயிற்றே அவர்கள். ஆதலால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறியும் ஆவலுடன் நானும் சென்றிருந்தேன். சம்மேளனம் மண்ட பங்களில் நடக்கவில்லை, மாடியிலும் நடக்கவில்லை. மரக்கிளைகளிலேயே நடந்தது. ஆதலால் மரம் ஏறத் தெரியாத நான் அவர்களுடன் நெருங்கியிருந்து அங்கு நடந்த பேச்சுகளைக் கேட்க முடியவில்லை. என்றாலும் அங்கு சென்றிருந்த நிருபர் ஆம் குரங்கு நிருபர் ஒருவரைத் தான் கைக்குள் போட்டுக் கொண்டு, நடந்த பேச்சுகளின் சாரத்தை மட்டும் தெரிந்து கொண்டேன்.

ஒரு சிறு குரங்கு பேசிற்றாம் - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிறார்களே, இந்த மனிதர்கள், இது நமக்குப் பெருத்த அவமானத்தைத் தருகிறது. நம்மைப் போல அழகு வாய்ந்தவனாகவா இந்த மனிதன் இருக்கிறான், மேனி அழகினிலும், விண்டுரைக்கும் வார்த் தையிலும், கூனியன யேடுகாலு நேர்த்தி துள்ளிலுமே வானரராம் நம் சாதிக்கு மனிதர் நிகர் ஆவரோ? அவர்களுக்கு வாலுண்டா! நம்மைப் போல் வடிவுண்டா? இல்லை, குண நலத்திலாவது நமக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டா? மனிதன் அடுத்தவனைக் கெடுக்கிறான். அவனைப் பற்றிப் புறம் பேசுகிறான். பொறாமை கொள்கிறான். பொன்னும் பொருளும் தேட