பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

கூற நான் முனையவில்லை. இதை விடப் பொருத்தமாகப் பலரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விளக்கத்தை யார் தந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நான் சொல்லும் விளக்கத்தை பல கலா ரசிகர்களிட மும், சிற்பக் கலைஞர்களிடமும் சொல்லிப் பார்த்திருக் கின்றேன். ஒருவரும் இதை மறுக்கக் காணோம். ஆகவே இந்த புரியாத புதிரை விடுவித்து விட்டதாக நினைத் துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணம் சரிதானா என்ற கேள்வி இன்னும் என் மனதில் இருக்கத்தான் செய்கிறது.