பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

உருவெடுத்தவள் என்று கருதப்படுகின்ற ஆண்டாளின் திவ்ய்ருபம் காணும் என் ஆவல் தீர்ந்த பாடில்லை.

வட ஆற்காடு மாவட்டத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது உத்தாரவியம் என்று கருதப்படும் பள்ளி கொண்டான் என்ற தலத்திற்கே சென்றேன். பாலாற்றின் கரையிலே பள்ளி கொண்ட பரந்தாமனைத் கண்டு வணங்கினேன். பின்னர் கோயிலின் மேலப் பிராகாரத்தில் உள்ள ராமன், கண்ணன் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கிய பின் வடகோடி மூலையில் உள்ள ஆண்டாள், சந்நிதிக்கும் சென்றேன். அங்குள்ள சிலை வடிவிலும், செப்பு படிமமாகவும் உருவாக்கியிருக் கிறார்கள்.

ஆண்டாளைக் கண்டேன் இருவருமே என் கற்பனை யில் உருவாகி இருந்த அழகிகளாகக் காணப்படவில்லை. திரும்பவும் கோயில் பிராகாரங்களிலேயே சுற்றிக் கொண் டிருந்தேன். கருவறையை அடுத்த பிராகாரத்திலே ஒரு மூலையிலே கண்ணன் ஒரு வனும் இன்னொரு மூலை யிலே ஆண்டாளும் சிலை யாகச் சின்னச்சிறு வடிவில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை வெளிக் கொணர்ந்து நோக்கினேன்.

அந்த ஆண்டாள் ரீ வில்லிபுத்துர் நந்தவனத்து ஆண்டாளைப் போல கட்டு முட்டென்று நிற்கவில்லை. அதற்கு மாறாக கம்பீரமாக வளர்ந்து நின்றாள்.