பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

73

வாய் முத்தம் சிந்தி விடுமோ
நெல்வேலி வடி வன்னையே?

இப்படிக் கேள்வி கேட்கும் பக்தனை அன்னை உதாசீனம் செய்ய முடியுமா? அவன் வேண்டுகோளை நிறைவேற்ற அவன் சொல்லிகொடுத்த நேரத்தையும் காலத்தையுமே உபயோகப்படுத்தி காரியசித்தியும் பெற்றிருப்பாள். நல்லதொரு அன்னையையும் அவள் மூலம் பக்தன் அடையும் நன்மையையுமே நினைத்துக் கொண்டு மேலே நடக்கலாம்.

தான் பெற்ற பிள்ளைகளைப் பராமரிப்பதில் அன்னையின் முதற் கடமை அவன் பசியை ஆற்றுவது தானே, சின்னப் பிள்ளையாய் இருந்தால் முலை அருத்துவாள். ஒன்றிரண்டு வயது கழித்ததும் அன்னம் ஊட்டுவாள். பின்னர், அவன் வளர்ந்து பெரியவனாக ஆன காலத்தில் அவனுக்கு உணவு படைத்து அவன் உண்பதைக் கண்டு மகிழ்விாள்

இந்த தாய்மையை நினைத்த கலைஞன் அவளை அன்ன பூரணி என்றே அழைக்கிறான். அன்னபூரணியின் வடிவம், காசி விசுவ நாதர் ஆலயத்தை ஒட்டிய கோயில் ஒன்றில் இருக்கிறது. மூலவிக்கிரகம் அவ்வளவு அழகாக இல்லை. பொன்னால் செய்யப்பட்ட அன்ன பூரணி ஒருத்தியும் அங்கே உட்கார்ந்திருக்கிறாள். அவளும் தழையத் தழையச் சேலையை உடுத்திகொண்டு