பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சிமொழி: அதனால் தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் தமிழிலேயே கோப்புகளை எழுதியாக வேண்டும். எனினும் தமிழக அரசின் அலுவலகங்களில் சில இன்னமும் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தா திருக்கிறது. தமிழக அரசின் அலுவலக நடைமுறைகளுக்கு நன்கு பயன்படும் வகையில் ஆட்சிச் சொற்கள் அகராதி என்னும் இந்த அகராதியைத் திறம்படப் படைத்திருக்கிறேன்.

வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றும் சில ஐ.ஏ.எஸ்., ஐ. பி. எஸ் அதிகாரிகள் அழகாக தமிழில் எழுதவும் பேசவும் செய்யும்போது நம்மவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் செய்தால்தான் அறிவாளிகள் என்று மதிப்பார்கள் என்ற போலி மரியாதைக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசவும் எழுதவும் செய்கிறார்கள். இதிலெல்லாம் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் கூட ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள். இவர்கள் எப்படித் தமிழை வளர்க்க முடியும்?

இந்த நூல் அரசு அலுவலர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்கண் குறைகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் அதை எழுதி அனுப்ப வேண்டுகிறேன். அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும்.

இங்ஙனம்

புலமை வேங்கடாசலம்

23/15, பூக்கார இரண்டாம் தெரு,

தஞ்சாவூர்-613001

தொலைபேசி எண் :238554

செல் எண்:9362852769