பக்கம்:ஆண்டாள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

ஆண்டாள்


பிளந்து அவனை மாளச் செய்தவன்; கம்சன் தன்னைக் கொல்ல அனுப்பிய மறஞ் சான்ற மல்லர்களைக் கொன்று குவித்தவன்.

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை- திருப்பாவை : 8

5. பலம் பொருந்திய யானையான குவலயாபீடத்தைக் கொன்றவன்; எதிரிகளைப் போராடி அழிக்க வவல்லன் மாயம் உடைய கண்ணன்.

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனை- திருப்பாவை : 15

6. சகடாசுரனைக் கட்டுக்குலைய உலைத்தான்; கன்று வடிவில் வந்த வத்சாசுரனைத் தூக்கி விளாமரத்தின் வடிவில் வந்திருந்த கபித்தாசுரன் மீது வீசி, வஞ்சம் செய் மாமன் கம்சன் ஏவலால் தன்னைக்கொல்ல வந்திருந்த இருவரையும் ஒரே நேரத்தில் ஒருசேரக் கொன்றான். பெருமழையால் வாடலுற்ற உயிர்களைக் காப்பான் வேண்டிக் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துக் கோகுலத்தைக் காப்பாற்றியவனும் கண்ணனேயாவன்.

பொன்றச் சகடமுதைத்தாய் புகழ்போற்றி
கன்று குனிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா யெடுத்தாய் குணம் போற்றி
-திருப்பாவை : 24

7. தேவகிக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் யசோதைக்கு மகனாக ஒளிந்து வளர்ந்து வரவும். இதனைக் கண்டு பொறுக்காத கஞ்சன் என்னும் வஞ்சன் வயிற்றில் நெருப்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/106&oldid=1462103" இலிருந்து மீள்விக்கப்பட்டது