பக்கம்:ஆண்டாள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஆண்டாள்


என்றும் வீரம் விளம்பப்படுதல் போன்று,

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கடடிலின்மேல்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா

- திருப்பாவை : 19

என்று அவன்தன் காதலும் கவினுறக் காட்டப்படுகின்றது.


நப்பின்னை

கண்ணனின் கண்கவர் வனப்பினைக் கொள்ளை கொண்டவனாய், அவனைத் தன்னிடத்திலேயே நிலையாகத் தங்கவைத்து நித்திய சுகம் அனுபவிப்பவளாய் ஆண்டாளால் அழகுற வருணிக்கப் பெறுபவள் நப்பின்னையே ஆவள். சிலப்பதிகாரத்தில் இளங்கோ வடிகளும்,

தொழுநை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென
- சிலப்பதிகாரம்; கொலைக்களக் காதை : 50 - 53

நப்பின்னைப் பிராட்டியின் நலத்தினைப் புனைந்துரைக்கக் காணலாம்.

திருப்பாவையில் நப்பினை பற்றி இடம் பெற்றிருக்கும் செய்திகள் வருமாறு:

மதநீரைப் பெருகவிடும் யானை நிகர்த்த பலமுடையவனும், போரிற் புறமுதுகிடாத தோள்வலி கொண்டவனுமான நந்தகோபாலனின் மருமகளான நப்பின்னைப் பிராட்டி நறுமணம் கமழும் கூத்தலையுடையவளாவள். அவள் சிவந்த கைகளில் அழகு மிகுந்த வளைகள் எப்பொழுதும் ஒலிசெய்தவாறு இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/114&oldid=1462115" இலிருந்து மீள்விக்கப்பட்டது