பக்கம்:ஆண்டாள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஆண்டாள்


தருவோம். எவரும் காணாத நிலையில் நாங்கள் ஊர்க்குள் ஒடிவிடுகின்றோம் அதற்கு வாய்ப்பாக எடுத்து ஒளித்து வைத்திருக்கும் எங்கள் உடைகளை எங்களுக்கு அருள் உள்ளத்தோடு தந்துவிடு.

எல்லே யிதென் இளமை
எம்மனை மார்காணி லொட்டார்,
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருங் தேறி யிருத்தி.
வில்லாலி லங்கை யழித்தாய்! நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
பட்டைப் பணித்தரு ளாயே.36

எவ்வளவு கூப்பாடுகள் போட்டாலும் அவையெல்லாம் விழலுக்கிரைத்த நீராயின. எனவே "இரக்கமே லொன்றுமிலா தாய்' என்று ஏசுகின்றனர். ஏசி என்ன பயன்? அவன் மனம் வைத்தால் தானே இவர்கள் மானம் காப்பாற்றப்படும். எனவே "இலங்கை அழித்த பிரானே" என்றும் "குரக்கு அரசாவது அறிந்தோம்" என்றும் எளியவர்க்காக வலியவர்களை அழித்து அவன் அருளிய திறத்தைப் பறைசாற்றிக் கூறித் தங்கள் உடையை வேண்டி நிற்கின்றனர்.

பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
பலர்குடைந் தாடும் சுனையில்,
அரக்கநில் லாகண்ண நீர்கள்
அலமரு கின்றவா பாராய்,
இரக்கமே லொன்று மிலாதாய்!
இலங்கை யழித்த பிரானே,
குரக்கர சாவ தறிந்தோம்
குருந்திடைக் கூறை பணியாய்37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/140&oldid=1462635" இலிருந்து மீள்விக்கப்பட்டது