பக்கம்:ஆண்டாள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.


தாழ்சடையும் நீள் முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்காணும் தோன்றுமால்-சூழும்
திரணடருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து67

"பல மலைகளின் பெயர்களைச் சொல்லிவரும் அளவிலே வேங்கடமலை என்ற பெயரும் என் வாயில் வந்துவிட்டது. இதனால் எனக்குப் பரமபதமும் சித்தித்து விட்டது" என்கிறார் திருமழிசையாழ்வார்.

வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கினறேன்68

குலசேகரர் வேங்கடமலைமாட்டுக் கொண்ட ஈடுபாடு பெரிதாகும்.

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்சு னையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே69

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச்
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே70

எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமயில்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே71

வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே72

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/153&oldid=1462154" இலிருந்து மீள்விக்கப்பட்டது