பக்கம்:ஆண்டாள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

181


மரியாதைகள் எல்லாம் மட்டுப்பட்டுக்கிடக்கிற இவ்வுலகத்தில் நந்தகோபன் மகன் என்ற பெயருடன் இரக்க மற்றவனாய், கொடியவனாய் விளங்கும் கண்ணனாலே அபலையான நான் மிகவும் துன்பப்படுத்தப்பட்டு இப்படி அப்படி அசைவதற்கும் இயலாமல் உள்ளேன். அவ்வாறு ஆயின பின்னை அக்கண்ணபிரான் திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான பாததூளியையாவது கொண்டுவந்து விட்டுப்பிரியாத உயிரையுடைய என்உடம்பிலே பூசுவீர்களாக.

எம்பொருமான் ஆணைக்குட்பட்ட இவ்வுலகத்தில் அவனைப் பெறாத தாயாகிய யசோதையானவள் வளர்த்தாள். என் மார்பகங்கள் அவன் திருத்தோள்களைத் தழுவவே துடிக்கின்றன என்றும் தம் துன்பத்தைத் கூறுகிறார் ஆண்டாள்.

அடுத்த பாட்டு ஆண்டாளின் ஆராத அவலத்தை அகழ்ந் தெடுத்துக் காட்டுகின்றது.

"உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி 'இருக்கிறாளா? இறந்துவிட்டாளா?” என்றும் கேளாதவனாய் என்னை முற்றும் கொள்ளை கொண்ட, பெண்கள் திறத்திலே பொல்லாங்கு செய்யுமவனான கண்ணபிரானை ஒருகால் நான் காணப்பெற்றேனேயாகில் பயனற்றதான என்னுடைய இந்த மார்பகங்களை வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி அந்தக் கண்ணனுடைய மார்பிலே எறிந்துவிட்டு என் துக்கத்தை போக்கிக் கொள்ளப் பெறுவேன்" என்கிறார் ஆண்டாள்.

உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/183&oldid=1462184" இலிருந்து மீள்விக்கப்பட்டது