பக்கம்:ஆண்டாள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

19


இவை போன்றே கடலிடத்துள்ள நீரைப் பருகி எழுந்த கார்முகிலுக்கு மாவலி ஊற்றிய நீரை வாங்கி வானளாவ வளர்ந்த கரிய திருமாலை உவமை கூறுதலை முல்லைப் பாட்டில் காண்கின்றோம்." (முல்லைப்பாட்டு 1-8). ஈண்டு நூலின் தொடக்கமே முல்லைநிலக்கடவுளை உவமை சாட்டித் தொடங்குகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

மதுரைக்காஞ்சியும் 'மாயோன் மேய வோண நன்னாள்' என்று சுட்டுகின்றது. மாயோன் வாமனனாகத் தோன்றிய ஒனநாள் மதுரையில் சிறப்பாக ஏழு நாட்கள் கொண்டாடப் பட்டு வந்தது என்று காண்கின்றோம்.

தொல்காப்பியத்திலும், மதுரைக்காஞ்சியிலும் குறிக்கப் பெறும் மேய' என்ற சொல் கவனிக்கத்தக்கது. மேய என்பதற்கு விரும்பிய, தங்கிய என்பன பொருள். "இதனால், முல்லைத் திணையில் திருமாலுக்குப் பிரீதி உண்டென்றும் அதனால் அங்கே அவர் விரும்பித் தங்கியுள்ளார் என்றும் அறிய வேண்டும்" என்பர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும். ப.69)

இனி, பதிற்றுப்பத்தில், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய நான்காவது ப த் து ள். திருவனந்தபுரத்துக் கோயில்கொண்டுள்ள திருமாலின் வழிபாட்டுச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. மற்றும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் திருமால் மறைகளால் போற்றப்படும் நிலை சுட்டப்பட்டுள்ளது; அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும், எள்ளுக்குள் எண்ணெய் இருப்பதுபோல் இந்த உலகத்து எவ்வுயிர்மாட்டும் நிற்கும் நிலையும் கூறப்பட்டுள்ளன; அவர் ஆழிதாங்கி நிற்பதுவும், பிறவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

துழாய் அலங்கல் செல்வன் சேவடி பரவுதல் பதிற்றுப் பத்து நூலுள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றது. கடலை ஆடையாக உடுத்த இந்நிலத்து மாந்தர் கைகளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/21&oldid=954775" இலிருந்து மீள்விக்கப்பட்டது