பக்கம்:ஆண்டாள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

35


என்று கூறி இதனை நிலைநாட்டுகின்றார்;57 (திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி மூலமும் விளக்க உரையும், ப. 3) இதற்கும் முன்னர் ஆராய்ந்தவர் கா. சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

"திருவல்லப தேவனென்னும் பாண்டியன் அக்காலத்தில் மதுரையில் ஆட்சி செய்ததாகத் தோன்றுகிறது. அவ்வரசன் கி. பி. 839 முதல் 862 வரை அரசு புரிந்தான். ஆதலால், ஆண்டாள் காலத்தைக் கவியுகம் 8ஆவது ஆண்டு என்று குறிக்கும் வைணவ சம்பிரதாயம் சரித்திரத்திற்கும் பொருந்து வதில்லை.55 (கா. சு. பிள்ளை, நூல், ப. 1) என்று கூறும் கருத்து ஈண்டுச் சிந்திக்கற்பாலது ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டில் அவதரித்தார் எனுங் கொள்கை நேரிதாகும்.

பெயர்

திருத்துழாய் அடியில் கிடந்தபோது அம் மகவின்மேல் உதிர்ந்த மலர்களில் வண்டுகள் மொய்த்தலும், இசைபாடி எழுதலுமாயிருந்தமையின் அதற்குச் 'சுரும்பார் குழற்கோதை' எனப் பிள்ளைப் பெயர் வைத்தார்.

தான் சூடிக் களைந்த மாலையினை இறைவனுக்குச் சூட்டியதால், 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார்' எனப் பட்டார். 'சூடிக்கொடுத்த நாச்சியார்' 'சூடிக்கொடுத்த பொற்கிளி' என்ற பெயர்களும் உண்டு. எல்லா உயிர்களையும் தன் அடிக்கீழ்ப்படுத்தி ஆள்பவன் ஆண்டவன். அவனையே தனக்குரிமைப்படுத்தி ஆண்டாள் ஆதலின் "ஆண்டாள்" என்றும் வழங்கப்பட்டார்.

"ஆண்டாள் என்ற பெயர் அவளுக்கு எப்போது ஏற்பட்ட தென்பது விளங்கவில்லை." ஆண்டவன் தேவியாதல் பற்றி ஆண்டாள் என்ற பெயர் வந்திருத்தல் கூடும்" என்பார் கா. சுப்பிரமணிய பிள்ளை.59 (ஆண்டாள் வரலாறும் நூலாராய்ச்சியும் ப. 2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/37&oldid=957505" இலிருந்து மீள்விக்கப்பட்டது