பக்கம்:ஆண்டாள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஆண்டாள்


நிறைந்த திருவாதிரை நாளின்கண்" என்றும், திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன் பூத்தடத்தின்கண் (பி-ம். பூராடத்தின்கண்) நிற்குமாதலின் அதனுடைய மார்கழி மாதம் குளமெனப் பட்டது” என்றும், "ஆகமங்களையுணர்ந்த பூசகர் அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழாவைத் தொடங்க" என்றும், "அம்பா வாடலையுடைய கன்னியர், சடங்கறிந்த முதுபார்ப்பனிமார் நோற்கு முறைமை காட்டப் பனியையுடைய புலர்தற்கண் ஆடிப்பரு மணலை யுடைய ஒழுகுகின்ற நீரின் கண்ணே குளிர்வாடை வீசுதலான் நின் கரைக்கண் உறையும் அந்தணரது வேதநெறியால் வளர்ந்த தழங்கழலைப் பேணிய சிறப்புடனே அவ்வொப்பனை யையுடைய மகளிர் சென்று, அதன்கண் தன் ஈரவணியைப் புலர்த்தாநிற்க, அவ்வந்தணர் அவ்வழற்கட் கொடுக்கும் மடை, வையாய், நினக்கு வாய்ப்புடைத்தாயிருந்தது என்றும், "அம்பாவாடலென்று தைந்நீராடற்குப் பெயராயிற்று, தாயோ டாடப்படுதலின்” என்றும், "இம்மையின்பங் குறித்துக் கன்னியர் தைந்நீராடலும், மறுமையின்பங் குறித்து ...இவை நினக்கன்றி ஏனையா...வென்றது" என்றும் வரைந்துள்ள உரைகளை நோக்கிப் பின் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்களின் கருத்துரையினை நோக்குதல் நலம் படைத்ததாகும்.


“இனி, இந்நோன்பை 'அம்பாவாடல்' என்ற பெயரால் ஆசிரியர் நல்லந்துவனார் கூறுகின்றார். தாயோடு ஆடப் படுதலின் இப்பெயர் பெற்றதென்பர். உரையாளராகிய பரிமேலழகர் 'தாயருகாநின்று தவத்தைந்நீராடுதல்' என்று இறுதியில் வரும் தொடரைக் கொண்டு அவ்வுரையாளர் இப் பொருள் கருதினாராகத் தெரிகின்றது. விரதம் நடத்துவோர் சிறுமியரேயாதலின் அவர் நீராடும்போது அவர் தாயரும் பக்கத்தில் நிற்பது இயல்பாதல் பற்றித் 'தாயருகாநின்று' என்று கூறப்பட்டதாகக் கொள்ளத் தக்கதேயன்றி, அங்ஙனம் தாயார் நிற்பதை ஒரு பெரிய விசேடமாக்கி, அதுபற்றி 'அம்பாவாடல்' என்று மார்கழி நீராட்டத்துக்கே பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/78&oldid=1155675" இலிருந்து மீள்விக்கப்பட்டது