பக்கம்:ஆண்மை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நன்மை பயக்குமெனின்

என்று சொன்னவுடன், வீட்டில் வந்து எங்கும் தேடினார். பணத்தைக் காணோம் என்று வீட்டில் ஒரே அமளி; களேபாரம்.

ஒன்றும் தெரியவில்லை.

பாங்க் காஷியரிடம் சென்று நம்பர்களைக் குறித்துக் கொடுத்து, வந்தால் சொல்லும்படி தெரிவித்து விட்டு வந்தார்.

அன்று சாயங்காலம் காஷியர் அவர்கள், பூவையாப் பிள்ளை செலுத்திய 600 ரூபாயில், இவர் கொடுத்த ஆறு நம்பரும் இருக்கின்றன என்று தெரிவித்துச் சென்றார்.

முதலில் சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டு விட்டார். இருந்தாலும், பணத்தாசை யாரை விட்டது என்று நினைத்துக் கொண்டு, வெகு கோபமாகப் பூவையாப் பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.

“என்ன அண்ணாச்சி? நீங்க இப்படி இருப்பிஹ என்று நினைக்கவேயில்லை. நீங்க குடுத்த ஆறு நூறு ரூபாயில் எனது ஆறு நம்பர்களும் இருக்கிறது என்று காஷியர் பிள்ளை இப்பத்தான் சொல்லி விட்டுப் போனார். நீங்கள் இப்படிச் செய்யலாமா…?” என்று அடுக்கிக் கொண்டே போனார். ஸ்வரம் ஏறிக் கொண்டே போயிற்று.

பூவையாப் பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. அகப்பட்டுக் கொண்டோம், மானம் என்றெல்லாம் ஒரு நிமிஷம் மனம் கொந்தளித்தது. திடீரென்று ஒரு யோசனை. வழிபட்ட தெய்வந்தான் காப்பாற்றியது.

“சவுந்திரம் மத்தியானந்தான் அவன் கடனுக்கு நீங்க உதவி செய்ததாகக் கொடுத்து விட்டுப் போனான். அதற்கென்ன?'”

“அப்படியா திருட்டு ராஸ்கல். சவத்துப் பயலே என்ன செய்கிறேன் பாருங்கள்! நம்ம இடையில் சண்டை உண்டாக்கி விட்டானே” என்று இரைந்து கொண்டு வீட்டிற்கு ஓடினார்.

சவுந்திரம், ‘கண்ணாணை’, ‘தெய்வத்தாணை’ எல்லாம் பலிக்கவில்லை. வேலை போய் விட்டது.

“நீ நாசமாய்ப் போகணும்” என்று ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி விட்டுப் போகும் பொழுது, தான் கொடுக்க வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/33&oldid=1694354" இலிருந்து மீள்விக்கப்பட்டது