பக்கம்:ஆண்மை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மை பயக்குமெனின்

33

தாங்க முடியாத பாரமாகிய கடன் சுமை தெய்வச் செயலாகத் தீர்ந்து விட்டதை எண்ணவேயில்லை. என்ன நன்றி கெட்ட உலகம்!

III

ஒரு வாரமாகி விட்டது.

புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

நடராஜன் சட்டைநாதப் பிள்ளையை நாடிச் சென்றான்.

“மாப்பிள்ளை வாருங்கோ” சட்டைநாத பிள்ளை, நடராஜனை எப்பொழுதும் இப்படித்தான் கூப்பிடுவார்; அதுவும் தனியாக இருக்கும் பொழுது.

“அந்தப் புஸ்தகம் வேண்டுமே, நாளாகி விட்டது.”

“அதைத்தான் சொல்ல வந்தேன், புஸ்ததத்தை இங்குதான் வைத்திருந்தேன். காணவில்லை. பயப்படாதே; விலையைக் கொடுத்து விடுவோம். சவுந்திரம் பயல் திருடி இருப்பானோ என்று சந்தேகம்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.

நடராஜன் திடுக்கிட்டு விட்டான். இப்படியும், அப்படியும் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, அந்தப் புஸ்தகம் கண்ணில் பட்டது. ஆச்சரியம், திகில், கோபம்.

“இந்தாருங்கள் 20 ரூபா இருக்கிறது. கேட்ட விலையைக் கொடுத்து விடுங்கள்” என்று சிரித்துக் கொண்டே நீட்டினார்.

“புஸ்தகம் அதோ இருக்கிறதே?”

சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டார்.

பிறகு சமாளித்துக் கொண்டு, “என்ன மாப்பிள்ளை! அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்து விடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால், நடக்காது. உங்களுக்குத் தெரியாததா?”

“அது திருட்டுத்தனம். என்னால் முடியாது.”

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/34&oldid=1694356" இலிருந்து மீள்விக்கப்பட்டது