பக்கம்:ஆண்மை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வழி

புருஷன், கிராமபோன் எல்லாவற்றையும் நாசம் செய்ய வேண்டுமென்று படுகிறது. காதைப் பொத்திக் கொண்டு உள்ளே வந்து, படுக்கையில் பொத்தென்று விழுகிறாள்.

அசட்டுத்தனமாக, தலையணைக்கடியில் வைத்திருந்த கொத்துச் சாவியில் இருந்த முள் வாங்கி முனை, விர் என்று மார்பில் நுழைந்து விட்டது.

அம்மாடி…

உடனே பிடுங்கி விடுகிறாள். இரத்தம் சிற்றோடை போல் பீறிட்டுக் கொண்டு வருகிறது. முதலில் பயம். அலமு இரத்தத்தைப் பார்த்ததில்லை. அதனால் பயம். ஆனால், இத்தனை நேரம் நெஞ்சின் மீது வைக்கப்பட்டிருந்த பாறாங்கல் எடுக்கப்பட்ட மாதிரி ஒரு சுகம். இரத்தம் வெளி வருவதிலே பரம ஆனந்தம். அதையே இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரத்தம் பிரவாகமாகப் பொங்கி, மேலுடைகளை நனைக்கிறது. இரத்தத்தின் பிசுபிசுப்புத் தொந்தரவாக இருந்ததனால், மேலுடையை எடுத்து விட்டாள். இரத்தம் வெளிப்படுவதில் என்ன சுகம். நேரமாக, நேரமாக. பலம் குன்றுகிறது. “அவரிடம் போவதற்கு என் உயிருக்கு ஒரு சின்னத் துவாரம் செய்து வைத்திருக்கிறேன். இன்னும கொஞ்ச நேரத்தில் போய்விடும்! ஏன் போகாது? போனால், இந்த உடல் தொந்தரவு இருக்காது…”

அலமுவின் தகப்பனார் புஸ்தகப் புழு. அன்று வெகு நேரமாயிற்றுக் கையிலிருந்த புஸ்தகத்தை முடிக்க. முடித்துப் போட்டு விட்டு, வெறந்தாவிற்கு வந்தார். அலமுவின் அறையில் வெளிச்சம் தெரிகிறது. “இன்னும் தூங்கவில்லையா?” உள்ளே சென்றார்.

என்ன…

அலமு மார்பில் இரத்தமா! அவள் ஏன் இம்மாதிரி அதைச் சிரித்த வண்ணம், பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

“அலமு! நெஞ்சில் என்னடி!” என்று கத்திக் கொண்டு நெருங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/39&oldid=1694386" இலிருந்து மீள்விக்கப்பட்டது