பக்கம்:ஆண்மை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழி

39

“நெஞ்சின் பாரம் போகச் சின்ன வாசல்” என்றாள் ஹீனஸ்வரத்தில். குரல் தாழ்ந்திருந்தாலும், அதில் கலக்கமில்லை, வலியினால் ஏற்படும் துன்பத்தின் தொனி இல்லை.

“இரத்தத்தைத் நிறுத்துகிறேன்” என்று நெஞ்சில் கையை வைக்கப் போனார்.

“மூச்சு விடும் வழியை அடைக்க வேண்டாம்” என்று கையைத் தள்ளி விட்டாள்.

பைத்தியமா?

“இரத்தம் வருகிறதேடி!” என்று கதறினார்.

“இந்த இரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! வழியை அடைக்காதீர்கள்” என்றாள்.

தலை கீழே விழுந்து விட்டது.

பிரம்மாவின் மூஞ்சியில் வாரியடிக்க வேண்டும், நியாயமும், சமூக தர்மமும் இருக்கும் போது!

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/40&oldid=1694393" இலிருந்து மீள்விக்கப்பட்டது