பக்கம்:ஆண்மை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய நந்தன்

51

“இல்லை. சாமி” என்று தயங்கினாள். பிறகு என்ன? இயற்கை இருவரையும் வென்றது.

ராமநாதனுக்கு… பிறகு ஒரு மகத்தான பாபம் செய்து விட்டோம் என்ற நினைப்பு. கருப்பன் மகளுக்கு, சின்னப் பண்ணையின் தயவு கிடைத்ததில் திருப்தி.

ராமநாதன் அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக வாக்களித்தான். ‘அதெப்படி முடியும் சாமி’ என்று சிரித்தாள்.

கருப்பனிடம் போய் நடந்ததைச் சொல்லிப் பெண்ணைக் கொடுக்கும்படி கேட்டான். அவனுக்குப் புதிய கொள்கைகள் எப்படித் தெரியும்?

“அது நயிந்தோ மகாப் பாவம். கண்ணாணே அப்படிச் செய்யக் கூடாது.”

ராமநாதனுக்கு இடி விழுந்தது போலாயிற்று.

5

காத்மா காந்தி தென்னாட்டில் ஹரிஜன இயக்கத்திற்காகப் பிரசாரம் செய்ய வந்தார். ஆதனூரில் ஐந்து நிமிஷம் தங்குதல். எல்லாம் ராமநாதனின் ஏற்பாடு. ச்ரௌதிகள் அவருடன் வாதம் செய்ய புராண அத்தாட்சிகளுடன் தயார். இதில் ச்ரௌதிகளுக்கு இரட்டை வெற்றி என்ற நம்பிக்கை. ஒன்று. காந்தியின் கொள்கையைத் தகர்ப்பது. இரண்டாவது காந்தியின் முன்பே, தன் புத்திரனிடம் சனாதனத்தின் புனிதத்தைக் காண்பிப்பது.

தோழர் நரசிங்கம் காந்தியை எதிர்த்துக் கேள்விகள் கேட்க, ஆதனூருக்கு வந்தான். தங்கையின் சமாசாரம் தெரிந்து விட்டது. தகப்பனாரிடம் கலியாணம் செய்து வைத்து விட வேண்டுமென்றும், அதற்குப் பறையரின் சமுதாயத்தின் கட்டுப்பாட்டால் செய்ய முடியும் என்றும் தெரிவித்தான். தகப்பனாரின் முட்டாள்தனமான நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. ‘பாப்பானின் சாயத்தைத் துலக்கி விடுகிறேன்’ என்று காத்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/52&oldid=1694443" இலிருந்து மீள்விக்கப்பட்டது