பக்கம்:ஆண்மை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பறிமுதல்

55

அந்தராத்மா” என அடிக்கடி சொல்லுகிறாரே, அது போல் இவருக்கும் கொஞ்சம் இருக்குமோ என்னவோ?

கேட்பானேன்? வெகு நுணுக்கமாக எழுதிய அந்தக் காகிதக் கத்தை அகப்பட்டுக் கொண்டது; அதைப் பறிமுதல் செய்தார்.

43 நெ. அதை எடுத்துக் கொள்ளும் பொழுது, பட்ட துடிதுடிப்பைப் பார்க்க வேண்டுமே. உயிரையே வேண்டுமென்றாலும், பணயம் வைப்பது போல்… இவனைக் கேட்காமலே, பிரியப் போகிற இந்தப் பொக்கான உயிரை மட்டுமா? தனது சக்தி முழுவதையும வைத்துப் போராடினான். நான்கு வார்டர்களும், ஒரு சூப்பிரண்டும் எதிர்க்கும் பொழுது, அந்தச் சின்ன அறையில், எப்படிப்பட்ட சண்டைக்கும் ஒரே விதமான முடிவுதான் உண்டு. அதுதான் நடந்தது.

43 நெ. க்குப் பலத்த காயம். புற உடம்பில் மட்டுமா? அது மட்டுமானால்தான், அதை ஒரு பொருளாக மதிக்க மாட்டானே? ஆத்மா, உலகம், இலட்சியம் எல்லாம் பறி போனது போல், துடித்தான்; சோர்ந்தான். அந்தப் பெண், தனது சினேகிதி வந்தால்… .ஐயோ!… அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.

ஜெயில் ஆஸ்பத்திரியில் மருந்து போட்டார்கள். தூக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

அன்று சிநேகிதியைக் காண அனுமதிக்கவில்லை.

II

ல்லார், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்பது ஒரு தத்துவப் பிரமை. இதற்கு எதிர்மறையாக தீயார். அவர் பொருட்டாகச் சிலரை வலுவாகச் சிறை செய்ய வேண்டியது என்பது ஒரு சமூக உண்மை.

பரமேச்வரம் சூப்பிரண்டாக இருந்தாலும், ஒரு சிறைவாசிதான். அந்தச் சமூக உண்மைக்கு உதாரணம், இவரும் அந்த ஜெயில் காம்பௌண்டிற்குள்தான் குடியிருக்கிறார். இவர் இஷ்டம் போல், அனாவசியமாகச் சுற்ற முடியாது. கைதிகளைக் காப்பதற்கு, இவரும் சிறை வாசம் செய்ய வேண்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/56&oldid=1694459" இலிருந்து மீள்விக்கப்பட்டது