பக்கம்:ஆண்மை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய கந்தப் புராணம்

63

உலாவியல் படலம்
தற்குள், காலாசாலை என்ற வானத்திலிருந்து, பேனா என்ற தெய்வீக ஆயுதமான வேலும் கிடைத்தது. பசி என்ற சூரபத்மனைக் கொல்லப் புறப்பட்டார். தாயின் இளமைப் பயிற்சியானது, கல்வி மன்றத்தில் நன்றாகக் கடைந்தெடுக்கப்பட்டு, இப்பொழுது நன்றாகப் பரிணமித்து விட்டது. அந்த மகத்தான பிலாக்கணம் என்ற சங்கநாதத்துடனும், பேனா என்ற வேலுடனும், அவர் ஏறி இறங்கிய மாளிகைகள் எண்ணத் தொலையாது. கடைசியாக 30-ரூபாய் யென்ற முக்தி பெறும் காலம் வந்ததும், தினம் பசி என்ற சூரபத்மனைத் தொலைத்த வண்ணம், தமது இல்லறத்தை நடாத்துகிறார்.

சுபம்!சுபம்!சுபம்!

புதிய கந்தப் புராணம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/62&oldid=1694490" இலிருந்து மீள்விக்கப்பட்டது