பக்கம்:ஆண் சிங்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

தான். எல்லோரும் சேர்ந்து வண்டியைத் தூக்கி ரோட்டில் விட்டனர்.

இன்ஸ்பெக்டர் தானகவே எழ முயன்றும் முடியவில்லை. இடுப்பில் பலமான காயம். மண்டையிலும் அடிபட்டிருந்தது. ‘ஸ்...அம்மா’ என்று படுத்துவிட்டார். அவரை மெதுவாகத் தூக்கி யெடுத்து வண்டியில் கிடத்தினர். தலையணையைப் பதனமாக அண்டைக் கொடுத்து அவருக்கு உதவி புரிந்தனர்.

மாடுகள் ஒரத்திலேயே நின்றன. பிறகு அவை கலையவே இல்லை. அவற்றை வண்டியில் பூட்டி, மெது வாக ஓட்டத் தொடங்கினான் மாடசாமி. இப்போது அவன் உள்ளத்தில் திகில் இல்லை. வியப்பும் பக்தியும் தான் மேலிட்டிருந்தன.

“என்னயிருந்தாலும், இது சக்தியுள்ள தெய்வம் தான். சாமி கருணையுள்ள சாமியும்கூட. ஆளைச் சாகடிக்கிறது கிடையாது. சரியானபடி பாடம் கற்பித்து, வாழ்வு பூராவும் தன்னை மறக்கவிடாமல் செய்து விடுவதுதான் சாலைக்கரையான் குணமாக இருக்கு’ என்று நினைத்துக்கொண்டான் அவன்.

கடைசிச் செவ்வாயன்று கோழி கொடுப்பது மட்டுமல்ல, பொங்கலும் இட்டுவிடவேண்டியதுதான்; தனக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படாதது தெய்வக் கருணைதானே என்று மகிழ்ந்து போனான்ன் மாடசாமி.

முத்தையபிள்ளைக்கு இடுப்பில் ஏற்பட்ட பலமான காயம் அவரைப் படுக்கையில் கிடத்திவிட்டது. அவர் டாக்டர் ஸர்டிபிகேட் பெற்று, வாதம் பலமாகப் பிடித்து படுக்கையில் தள்ளிவிட்டதால் வேலை செய்ய இயலவில்லை என்று மூன்று மாத லீவுக்கு மனுச் செய்து விட்டார்.

அத்துடன், மேலதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் எழுதினர். தன்னை வேறு இடத்துக்கு மாற்றிவிட வேண்டுமென்று தயவாகக் கோரியிருந்தார் பிள்ளை

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/22&oldid=1071129" இலிருந்து மீள்விக்கப்பட்டது