பக்கம்:ஆதி அத்தி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆதி அத்தி அமையாது இமய மலை வரையிலும் படையெடுத்துச் சென்று வழியிலே எதிர்த்த அரசர்களையெல்லாம் வென்று இமயத்தில் நமது புலிக் கொடியைப் பொறித்து வந்தீர்கள். கரிகாலன் : ஆமாம். அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமல்லவா? இப்பொழுது அதைப் பற்றியென்ன? சேனபதி : வடநாட்டுப் படையெடுப்பின் போது தங்கள் போர் வலிமைக்குப் பணிந்து வச்சிர நாட்டரசன் கொடுத்த முத்துப் பந்தரும், மகத நாட்டரசன் தந்த பட்டி மண்டபமும், அவந்தி வேந்தன் தந்த தோரண வாயிலும் இதுவரை நமது அத்தாணி மண்டபத்தில் அனைவரும் காணுமாறு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை யெல்லாம் கலைக் கூடத்திலே ஒர் ஒதுக்கிடத்தில் வைக் கும்படியாகத் தாங்கள் இப்பொழுது ஆணையிட்டிருக் கிறீர்கள். அதன் கருத்தை எனக்குத் தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். கரிகாலன் : சேனபதி, இது விஷயமாக எனது உள்ளக் கருத்தை அமைச்சரிடம் தெரிவித்துக் கொண் டிருந்தேன், அவர் உங்களுக்குக் கூறவில்லையா? (கரிகாலன் அமைச்சரைக் குறிப்பாகத் திரும்பிப் பார்க் கிருன். சேனாபதி தமது ஆசனத்தில் அமர்கிரு.ர்.1 அமைச்சர் : (போரினல் பெற்ற வெற்றிச் சின்னங் களே வேந்தர் இப்பொழுது அவ்வளவு பெரிதாகக் கருது வதில்லை. அவருடைய உள்ளம் இப்பொழுது சோழ நாட்டை வளப்படுத்துவதிலும் குடிகளின் இன்பத்தைப், பெருக்குவதிலும் அதிகமாக ஈடுபட்டிருக்கிறது) கரிகாலன் : அமைச்சர் கூறுவது மெய்தான. ஆனல் அதன் காரணமாக நமது போர் வீரர்களும், சேனபதியாகிய நீங்களும் காட்டிய போர்த் திறமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/11&oldid=742397" இலிருந்து மீள்விக்கப்பட்டது