பக்கம்:ஆதி அத்தி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尝然 ஆதி அத்தி சாத்தன் (மாரனைப் பின் தொடர்ந்து கொண்டே) : டேய், அப்படிச் சொல்லி என்னே ஏமாத்த முடியா துடா-வாடா. (போகிரு.ர்கள்.: திரை காட்சி மூன்று (காலை சுமார் 10 மணி இருக்கும். கழாரில் காவிரிக் கரையில் மற்ருெரு இடம். அணி செயயப் பெற்ற மேடையில் ஆதிமந்தியும் ஆட்டனத்தி யும் நாட்டியம் ஆடுவதற்குத் தயாராக நிற் கிருர்கள். கரிகாற் பெருவளத்தான், வேண் மாள், அமைச்சர், சேனபதி, மற்றுமுள்ள பிரதானிகள், பெருங்குடி மக்கள் உரிய ஆசனங் களில் அமர்ந்திருக்கிருர்கள். திரை விலகியதும் நாட்டியம் தொடங்குகிறது. முதலில் ஆதி மந்தி பாட்டிற்கு அபிநயம் பிடித்து ஆடி வருகிருள்.) (பாட்டு) பல்லவி குழலோசை கேட்குதடி-தோழி குழைகின்ற தென்றன் உள்ளம் -(குழலோசை) (அனுபல்லவியைப் பாடிக்கொண்டே அத்தி ஆடி ஆடி வருகிருன்.) அனுபல்லவி அழகோங்கும் ராதா என் ஆசைமயில் காணேனே தழைத் தோங்கும் வெண்ணிலவில் தனியிடத்தே வாராயோ (அத்தி ஆடி ஒருபுறம் நிற்க, ஆதிமந்தி பல்லவி யைப் பாடி ஆடி வருகிருள். இருவரும் ஒரு வரை ஒருவர் இன்னும் பார்க்கவில்லே. ஆதி மந்தி சரணத்தின் முதலிரண்டு வரிகளுக்கும் அபிநயம் பிடிக்கிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/43&oldid=742431" இலிருந்து மீள்விக்கப்பட்டது