பக்கம்:ஆதி அத்தி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆதி அத்தி மூன்ரும் குரல் ; அவருடைய வலிமை மிகுந்த தோள்கள் எவ்வளவு அழகாகத் தோன்றுகின்றன! முதற் குரல் : அவரது பரந்த மார்பைப் பாருங்கள்! இரண்டாம் குரல் ; அதோ அவர் யானையைப் போல மேலெழுந்து மறுபடியும் நீரில் முழுகுகிருர்! மூன்ரும் குரல் : தம்பீ, வெள்ளம் அதிகமாக வரு கிறது போலிருக்கிறதே? முதற் குரல் : ஆமாம், வெள்ளம் திடீரென்று கரை புரண்டு வருகிறதே? இதென்ன மாயமாக இருக் கிறது? ஆட்டனத்தி இன்னும் மேலே வரக்கானோமே? இரண்டாம் குரல் (கவலையோடு) : இவ்வளவு நேர மாகத் தண்ணீருக்குள் முழுகி இருக்கிருரே எப்படி மூச்சுப்பிடிக்க முடியும்? மூன்ரும் குரல். இவ்வளவு நேரம் யாராலும் மூச்சுப் பிடிக்க முடியாதே? ஐயையோ...ஒரு வேளை...ஏதாவது ஆபத்து. முதற் குரல்: உஸ்...சத்தமாய்ப் பேசாதே...இள வரசி காதில் பட்டால் பயந்து விடுவார்கள்... (கலவரமான பேச்சிலே யாரும் பாட்டு முன்பே நின்றதை உணரவில்லை. ஆதிமந்தி எழுந்து முன்னல் வருகிருள். அவள் முகத்தில் கவலை படர்கிறது.) ஆதிமந்தி: அவர் இத்தனை நேரமாக வெளியே தலை காட்டாமல் நீருக்குள் முழுகியிருக்கிருரே? இரண்டாம் குரல்: இளவரசியாரே, மனங் கலங்கா திர்கள்-அவர் வந்து விடுவார். மூன்ரும் குரல்: நான் நீரில் குதித்துப் பார்க் கட்டுமா, தாயே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/52&oldid=742441" இலிருந்து மீள்விக்கப்பட்டது