பக்கம்:ஆதி அத்தி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆதி அத்தி கரிகாலன் . அவள் மனநிலை எப்படி இருக்கிறது? ஏதாவது...... அமைச்சர் : இதுவரை எவ்விதமான நன்மையும் ஏற்படவில்லை. அவர் கடற்கரை வரையிலும் போய்த் தான் திரும்புவாரென்று தோன்றுகிறது. கரிகாலன் அவளுடைய ஆழ்ந்த காதலே இப் பொழுதுதான் நான் உணர்கிறேன். எனக்கென்னவோ அவள் மனம் சாந்தியடைந்து இயல்பான நிலைமை யடையுமென்று தோன்றவில்லை. அமைச்சர் : ஆதிமந்தியைத் தடுத்து நிறுத்தினல் மனம் நிச்சயமாகக் குழம்பிப் போய்விடும். இப்படியே சென்ருலாவது ஒருவேளை அவர் ஆறுதல் அடைய வழி யிருக்கிறது. கரிகாலன் : அவளை எச்சரிக்கையோடு காத்துக் கொள்ளுங்கள். பக்கத்திலே யாரும் செல்லவேண்டாம். மருத்துவர்கள் கூறுகிறபடியே விட்டுப் பார்ப்போம். அழுது அழுது அரற்றி அரற்றி அப்படியாவது அவளு டைய மனம் சாந்தி யடையுமா என்று பார்ப்போம்..... கலைக்காகவே பிறந்த மகள்...... இப்படி...... (கரிகாலன் கலங்குகிருன்.) அமைச்சர் : அரசே...உங்களுடைய கலங்கா நெஞ்சம் இப்பொழுது எங்கே போய்விட்டது...? கரிகாலன் : நான் கலங்கவில்லை. அமைச்சரே-நான் கலங்கவில்லை. நம்மாலான முயற்சியெல்லாம் செய்து பார்த்துவிடுவோம்...... நீங்கள்தான் இந்தச் சமயத்தில் எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். (அமைச்சர் தலை வணங்குகிரு.ர்.) திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/78&oldid=742469" இலிருந்து மீள்விக்கப்பட்டது