பக்கம்:ஆதி அத்தி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&釜 ஆதி அத்தி அத்தி: உனது பாடலும் ஆடலும் எனக்கு அமூத மாக இருக்கின்றன. அவற்றை அனுபவிப்பதற்காவது இப்படியே ஆயுளெல்லாம் படுத்திருக்கலாமென்று ஆசை யுண்டாகிறது. மருதி: (பர்டிக்கொண்டே ஆடுகிருள்.) பல்லவி வருவாரோ அவர் இன்று வருவாரோ கிளியே-என்னுள்ளம் மகிழ்ந்திடவே என்னுடன் கூடி இன்புறவே (வருவாரோ) அனுபல்லவி முருகா முருகா எனங்ான் சதா உரைவாசகம் கேட்டு நீயும் முருகா முருகா என்பாய் கிளியே-அவர் மனம் உருகாதோ உருகியவர் எனகாடி (வருவாரோ) &Firsorio அம்மா என்றழைக்கவும் மறந்தேன் அவர் பெயரே சொல்லி நாணினேன் அன்னமென்றலும் முருகனை அள்ளிஉண்ணுவே னென்றேன் அம்மான் மகளொடு வரும் குமரனிதை அறியாரோ அறிந்தே அன்புடன் அவரென்னை அணைத்தருள் புரிந்திடவே (வருவாரோ) (பாடலும் ஆடலும் நிற்கின்றன. அவற்றிலே மெய் மறந்திருந்த அத்தி திடீரென்று பேசத் தொடங்குகிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/84&oldid=742476" இலிருந்து மீள்விக்கப்பட்டது