பக்கம்:ஆதி அத்தி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஆதி அத்தி முதற்பெண்: (ஆதிமந்தி பாடி அழுவதைக் கேட்டுப் பறவைகளும் விலங்குகளும் வாயடைத்து விசனத்தில் ஆழ்ந்திருக்கின்றன? இரண்டாம் பெண்: காவிரிக் கரையிலேயே இப்படி எவ்வளவு தூரம் போக முடியும்...? கடலும் அருகில் தானே இருக்கிறது...? மூன்ரும் பெண்: கடற்கரையை அடைந்துவிட்டால் அதற்மேல் என்ன செய்வாரோ...... (பயந்த குரலில்) ஒருவேளை கடலிலேயே.. முதற்பெண் உஸ்...அப்படி...ஏதாவது அமங்கல மாகச் சொல்லாதே...... இரண்டாம் பெண் ஆட்டனத்தி உயிருடனிருந் தால் இதற்குள் திரும்பி வந்திருக்க மாட்டாரா? மூன்ரும் பெண்: கடலுக்குப் பக்கத்திலே வந்து ஒடக்காரர்கள் தேடிப் பார்த்தார்களோ என்னவோ? முதற் பெண்: ஆமாம். தேடி அவனுடைய உடம்பை எடுத்து வந்தால் அதேைல என்ன பலன் கிடைக்கும்? நமது இளவரசி அதைப் பார்த்து உயிரே விட்டு விடுவார்கள். மூன்ரும் பெண் ஆட்டனத்தியோடு சேர்ந்து கட லோடு போய்விட்டால் கூட நமது இளவரசியின் துன்பம் தீரும். அவருடைய துன்பத்தை என்னலே பார்க்கவே முடியவில்லை. முதற் பெண்: வாருங்கள், இருட்டாகப் போகிறது. ஆதிமந்தி எந்த இடத்திலே படுத்து உறங்கப் போகிருர் களோ...பக்கத்திலே சென்று காவலாவது செய்வோம். இரண்டாம் பெண்: ஆமாம்......... வ ா ரு ங் க ள் போவோம்...பகலிலே வேண்டுமானுல் இளவரசியைத் தனியாக விட்டுவிடலாம்...இரவிலே அப்படி முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/87&oldid=742479" இலிருந்து மீள்விக்கப்பட்டது