பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

“ பார்ப்பான் பாங்கன் றொழி செவிலி சீராரு சிறப்பிற் கிழவன கிழத்தியோ டளவியன மரபினறு வகை பேருங் களவினிற் கிளவிக் குறிய ரெமய."

இவ்வாரிய பிராமணர்கள் கடவுளுக்கும் மனிதர்களுக் கும் மத்தியில் தாங்கள் நிற்பவர்களென்றும், அநேகவித மந்திரவித்தைகளை தெரிந்தவர்களென்றும், மனிதர்களுக்கு தாங்கள் தேவர்களென்றும், தாங்கள் எதையும் செய்ய சக்தி யுள்ளவர்களென்றும், நவக்கிரகங்கள் தாங்கள் சொல்லுகிற படி நடக்கவேண்டியவைகளென்றும், வேண்டும்போது மழை பெய்யச்செய்ய சகதியுள்ளவாகளென்றும் தமிழாகளை பலவகையில் பயமுறுத்தினார்கள். பண்டைகாலத் தமிழா சர்கள் நீங்கி விபசாரத்தால பிறந்த தமிழரசாகளை கைவசப படுத்திக்கொண்டு பலவித தந்திரங்கள் செய்து ஏமாற்றி, குற்றமற்ற தமிழர்களை தங்களிட தீய ஒழுக்கங்களையும் ஆசாரங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தனா.

தமிழ் நூலகளெலலாம கடலுக்கு இறையாய்விட்ட படியினால்,பின்னிட்டுவந்த தமிழ் வித்துவான்கள வியாசர் கட்டுபாடு செய்து எழுதிய நூல்களையே ஆதாரமாக எண்ணி தமிழர் எலலாம ஆரியரென்று சரித்திரம் தெரியாமல் கூறி போயினர். ஆரியர் தமிழர்களிடத்திலிருந்து தங்களுக்கு. வேண்டியது எவ்வளவோ அவ்வளவு தெரிந்துகொண்டு, தங் கள் சுயநன்மைகளைக்கோரி எழுதிக்கொண்ட சுருதிஸ்மிருதி இதிகாசங்களையே தமிழ் வித்துவான்கன் உன்மையான நூல் களென நம்பி தாங்கள் அவைகளை அனுசரித்தும் பிறரை அனுசரிக்கும்படி ஏற்பாடுகள் செய்துவிட்டு போயினர். அவ் வித கொள்கைகளையும் அனுசரிக்க அநேக நூல்களையும் எழு திவிட்டார்கள். தமிழகத்தில் ஆரியரிட ஆசாரங்களையும் நடவடிக்கைகளையும் ஒற்றுக்கொள்ளாதவர் தாழ்ந்தவர் என்