பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

போர் ஒர்காலத்தில் இந்துக்களாயிருந்து பின்னிட்டு சமண பௌத்த மதங்களை யேற்றுக்கொண்டவர்களுக்கு பெயர். அப்படி மதம் மாறினவர் ஜாதியற்றவர்களானார்கள் - அவர் களை ஜாதியற்ற சூத்திரர் என்று சொல்லவேண்டுமே ஒழிய பஞ்சமர் எனலாகாது. காண்டன்ய, தனஞ்ஜய, வசிஸ்ட , விஸ்வாமித்திர கோ கதிரத்தார் சூத்திரர் யானார்களே ஒழிய பஞ்சமர் ஆகவில்லை. இந்தபதம ஒர்காலத்தில் ஆரியரில் ஜாதிகெட்டவர்களுக்கு உபயோகிக்கப்பட்டதால் இவர்களுக்கு தகாது." இவாகளிடம் பூர்வீக சரித்திரத்தை அடியில் வரு மாறு கூறுகின்றனர் : ' இவர்கள் உண்மையான சரித்திரம் கசியப்ப பிரமா விடமிருந்து ஆரம்பிக்கிறது கசியப்ப பிரஜாபதியின் இரண் டாவது மனைவியாகிய திதி என்பவளின் குமாரர்கள். பரி சுத்த சாஸ்திரங்களில் இவாகளுக்கு "தைத்தியர் என்று பெயர். கசியபய முனிவரின் முதல் தாரமாகிய அதிதியின் குமாரர்களுடன் எக்காலமும் சண்டைசெய்ய முடியாமல் தென்னாடு வந்து அவ்விடமே நிலைக்கலாயினர். அவர் களிட அரசன ஹிரண்யகசியப்பர் என்பவர் பிரஹலாதன் ஆமலாதன் பின்னிட்டுவந்தவர். சென்னப்பட்டணம் அடுத்த மகாபலிபுறத்தில் அரசுசெய்த மகாபலி என்பவர் பின் சக் கிரவர்ததி யாயினா. பிறகு பாணராஜா ஆண்டார். பிறகு இந்த ராஜ்ஜியம் ஜெயிக்கப்பட்டது. அப்பொழுது அதற்கு தொண்டைமண்டலம் அதாவது தொண்டர், அடிமைக ளின், மண்டலம், நிலம என்கிற பெயர் வந்தது. அக்காலத தில் அதற்கு இரண்டு ராஜதானிகளிருந்தன. ஒன்று பறவை புரம் - பறவை புறத்தி லிருந்தவர்களுக்கு பறையர் என்று பெயர். இவாகள் தமிழர் . பறவை புறம் - நீர்பட்சிகளாகிய - பறவை என்கிற பதத்தி லிருந்துவந்தது. கீர்த்திபெற்ற வாத்துகளுக்கு இப்பொழுதும் பேர்பெற்ற தற்கால காஞ்சி.