பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

630 ஆண்டில் இந்தியாவிற்கு வந்தபோது தென்னிந்தியா விற்கும் வந்தார். அப்பொழுது அவர் காஞ்சிபுறத்தை போய் பார்த்தபோது அவ்விடத்தில் பத்தாயிரம் புத்தமத காம குருக்களையும் புத்தமடங்களையும் பார்த்ததாகவும் சொல்லு கிறார். முன் சொன்னபடி காஞ்சிபுறம் பறவைபுறமாகிறது. இப்பொழுதும் செங்கலபட்டு வட ஆர்க்காடு தென ஆர்க்காடு ஜில்லாக்களில் “ பறையர் என்போர் அதிகமாயிருக்கின்ற னர். ஆகையினால் காஞ்சிபுறம் பௌத்தமதத்துக்கு அக்கா லததில் தென்னிந்தியாவில் சிரேஷ்டமான இடமா யிருநதி ருக்கவேண்டும். இம்மாதிரி தென்னிந்தியாவில் பௌத்த மதத்தை தழுவியவா “ பறையர் " என்போரின் முன்னோர் கள். இவர்களை பிராமணா அதிகாரம ஏற்பட்ட பிறகு அவர் கள் “ பறையர் என்று தாழ்மைபடுத்தினர். "பறையர்" என்பபோர் புத்தமதத்தை தழுவினபடியினால் பிராமணரிட வேதங்களை நமபாதவர்களாயினா. அப்படி அவர்கள் வேதக களை நமபாமல அவாகனை ஏத்துக்கொள்ளாதவாகள் "சண் டாளர் என்றார்கள். தற்காலத்திலும் ஒரு இந்துவான வன் கிரிஸ்துமதததில் சேர்ந்துகொண்டால அவன் பிராம ணர் வேதங்களை நம்பாதவனாகிறான். அப்போபபட்டவனை "பறையன் என்று சொலவது வழக்கமுண்டு பூராவத தில இலங்காதேசமென்றும், தற்காலம் கொளமபு - கண்டியென்றும் வழங்கும்படியான தேசத்தில் வாழுமகுடி கள் யாவரும் பெருமபாலும் பௌததாகளென்பது சகல ருக்கும் தெரிந்த விஷயமாகும். சமஸ்கிருதத்தில் வரைந் துள்ள சுந்திரகாண்டத்தில் அநுமார் இலங்கை சேர்ந்து அவ விடத்திலுள்ள மாளிகையிலுட்கார்ந்து அதனை புத்தர் வியா ரமென்றும் கூறியதாக விளங்குகின்றது. அவ்வகை பௌத்தநாடென்று தெரிந்தே தற்காலம் இராமநாடகம பாடிய அருணாசலக்கவிராயர் என்பவர் தானியற்றியுள்ள