பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


என்றார்கள். மனுதர்மசாஸ்திரத்தில் சண்டாளனுக்கு அடி யில் குறித்தவாறு தெண்டனை சொல்லியிருக்கிறது:-" தங்க ளுக்கு தகுந்த வேலைகளை செய்துகொண்டு, இவர்கள் காட்டி லாவது, சுடுகாட்டு பக்கங்களிலாவது, குன்றுகளின் மேலா வது, பெரிய மரங்களின் அடியிலாவது குடியிருக்கவேண்டி யது. அவர்கள் கிராமங்களின் வெளிபாகங்களிலு மிருக்க வேண்டியது அவர்களுக்கு பாத்திரங்கள் கிடையாது. நாய் களும் கழுதைகளும் அவர்கள் செல்வம். சவங்களின்மே லிருக்கும் துணிகளை அவர்கள் தரிக்கவேண்டும் ; உடை பாண்டங்களில் புசிக்கவேண்டும், இரும்புநகை போடவேண் டும். அவர்கள் திரிந்து கொண்டே யிருக்கவேண்டும். ஒரு வன் மதசடங்குகள் செய்யும்போதே அவர்களை பார்க்கவும் கூடாது அவர்களுடன் பேசவும் கூடாது. அவர்கள் தங்க ளுக்குள்ளவே விவாகம் செய்துகொள்ளவேண்டும். அவர்க ளுடன் லேவாதேவி யாரும் செய்யக் கூடாது. அவாகளுக்கு சாபபாடு குடுக்கும்படசத்தில் உடைந் தபாண்டங்களில் ஆட காரன் மூலமாய் குடுக்கவேண்டும். அவர்கள் கிராமத்தில ராத்திரியில் திரியக்கூடாது. அரசன் உத்திரவின் பேரில் பகல்காலத்தில் கிராமத்திற்குள் வரலாம கிராமததில் அனாதி பிணங்களை அவர்கள் புதைக்கவேண்டியது அர சன் கொலையாளிகளென்று ஏற்படுத்தியவர்களை அவாகள் கொன்று அவர்கள் துணிமணிகளையும் படுக்கைகளையும் எடுத் துக்கொள்ளலாம்" (மனு அதிகாரம் X. 5. 50-55.) புத்தமதமடங்கி பிராமணர்கள் அதிகாரம் பெற்ற போது மேல் குறித்த மனுதர்ம சாஸ்திரபடி திராவிடரில் புத்தமதத்தை சேர்ந்தோரை அடக்கிவிட்டார்கள். அச சாஸ்திரப்படியே " பறையர் " என்போர் நாளைக்கு மிருக கிறார்கள்.