பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


"சமையாசார சங்கற்ப விகர்ப்பமு மையார்தாங் குலவாசார மானது மிமையாதாரும் விடாத வில்லாழ்க்கையு மமையார் தோளாய் விடுதலா சாரமே."

இம்மாதிரி யின்னம் அநேகபாடல்கள் எடுத்து எழுத லாம். இடமின்மையின் இங்கு சிலவற்றை கூறுவோம்.

பாச்சலூர் பதிகம.

"ஒருபனை இரண்டுபாளை ஒன்று நுங் கொன்று கள்ளு அறிவினி லுயாந்தவர்க்கு அதுவுங்கள் இதுவுங் கள்ளே ஒருகுலை உயர்ந்ததேனோ ஒருகுலை சாழ்ந்ததேனோ பறையனைப் பழிப்பதேனோ பாச்சலூா கிராமத்தாரே."

நலவழியில்.

" ஜாதியிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ளபடி."

இன்னும் ஒருவர் கூறுவதாவது:-

"பறையரைப் பறையரென்று பறைந்திடு மனிதர்கேளீர் பறையர் தம மலததைத்தின்னும் பனறியைப் புசிப்பதென்னோ கறையதே யாகுமந்தக கறிதனைக் கலத்தினிட்டு மறையவே வைத்துத்தின்னு மனிதரே பறையர்கண்டீர்."

இம்மாதிரியாக தமிழ் புலவர்களும் மற்றவர்களும் ஜாதி வித்தியாசததை நீக்கவும் பிராமணர் ஆசாரம் வேதங்கள் இவைகளை நீக்கிவிடவும் பலவிதமாய் பாடல்கள் மூலமாய் பிர சங்கித்துவந்தார்கள். ஆயினும் ஜாதி வித்தியாசங்கள் நீங்கவில்லை. இந்துமதம் ஜாதியின் பேரில் கட்டப்பட்டிருக்கிறது. ஜாதியை நீக்கினால் மதம் கெட்டுப்போகிறதாக நினைக்கிறார்.