பக்கம்:ஆத்மஜோதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

ஆத்மஜோதி

இலக்கியத்தில் ஊறித் திளைக்கும் பேரறிஞர் கி.வா.ஜ. அவர்கள் சிறந்த முருக பக்தர்; அவர்களுடைய இல்லத்தில், அடியார்கள் திருக்கூட்டத்தையும், இலக்கிய நண்பர்களின் பெருங் கூட்டத்தையும் எப்போதும் காண முடியும். தம்முடைய மக்களுக்கெல்லாம் முருகனின் பல்வேறு நாமங்களை இட்டு அழைப்பது அவர் முருகனிடம் கொண்டுள்ள ஈடுபாட்டிற்குச்சான்று.

‘கலைமகள்’ ஆசிரியராகக் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அரும்பணியாற்றி வரும் திரு. ஜகந்நாதன், தமது பத்திரிகைமூலம்சிறந்த தமிழ்எழுத்தாளர்களையும் தலைசிறந்த இலக்கியப் படைப்புக்களையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். மணிக்கொடி பத்திரிகை மூலம் தோன்றிய சில சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் தலைசிறந்த படைப்புக்கள் பல கலைமகள் மூலம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இன்று முன்னணியில் நிற்கும் பெண் எழுத்தாளர்களில் பலர் கலைமகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. திரு. கி. வா. ஜ. அவர்கள் ஒரு உற்சாக ஊற்று. அவர் அளிக்கும் உற்சாகத்தாலும், ஊக்கத்தாலும் எண்ணற்ற இளம் தமிழ்எழுத்தாளர்கள் இன்று முன்னேறி வருகின்றனர். துரோணரைப் போன்று திரு. கி. வா. ஜ. அவர்களே நல்லாசாகைக் கொண்டு இலக்கியப் பாதையில் முன்னேறி வரும் “ஏகலைவர்” கூட்டம் நாளுக்கு நாள் அதிரித்து வருகின்றது என்றால் மிகையாகாது.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்து பணியாற்றும் திரு. கி. வா. ஜ. பழைய பரம்பரை வளரவும், பழமையும் புதுமையும் ஒன்றி இணையும் இலக்கியப் பரம்பரை உருவாகவும் பாடுபட்டு வருகிறார், திரு. கி. வா. ஜ. அவர்களின் தலைமகன் செல்வன் ஜ. சாமிநாதன் புதிய யுக்தியுடன் கற்பனை வளம் நிறைந்த உருவகக் கதை படைப்பதில் சிறந்து விளங்குவதை இன்றைய இலக்கிய அன்பர்கள் நன்கு அறிவார்கள்.

அறிஞர் ஒருவர் குறிப்பிட்டபடி “ஆழ்ந்த அவரது புலமை; அழகும் நளினமும் செறிவும் கொண்ட அவரது பேச்சு; இனம் கண்டு இலக்கியப் பரம்பரையை உருவாக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/14&oldid=1544437" இலிருந்து மீள்விக்கப்பட்டது