பக்கம்:ஆத்மஜோதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்மஜோதி

335

என்பன் என்று பணிவோடு தொண்டு செய்தும், அவனுக்குப் “பல்லாண்டு” பாடிய பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்த, கோதை நாச்சியார் என்ற, ஸ்ரீ ஆண்டாளின் அருள் நிறைந்த பெருவாழ்க்கைச் சரிதம் அறியாதார் இலர் எனலாம். மார்கழி மாதந்தோறும் மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையும் தமிழகம் எங்கும் முழங்குகின்றன. ஆகவே சைவம், வைஷ்ணவம் என்ற வேறுபாடின்றி தமிழ் மக்கள் போற்றும் இப்பாவைகள் இரண்டும் நமக்குற்ற அருள் விருந்தாகும்.

அரியும் சிவனும் ஒன்றே. சிவமும் சக்தியும் இணைபிரியாத, பிரிக்க இயலாத ஒன்று. சக்தியின்றி சிவம் இல்லை; சிவமின்றி சக்தியுமில்லை! சக்தியே ஆண்டாளாக அரியாக மிளிர்கின்றாள்.

’அரியலால் தேவியில்லை“ என்பதும்
மையரிக் கண்ணியாளும் மாலுமோர் பாகமாகி ... என்பதும்; “மண்ணினையுண்ட மாயன் தன்னையோர் பாகங்கொண்டார்;

என்பதும் அப்பர்பெருமானது திருவாக்கு. அதுபோலவே திருமங்கை யாழ்வாகும்

“பிணங்கள் இடுகாடு அதனுள் நடமாடு பிஞ்ஞகணோடு. இணங்கு திருச்சக்கரத்து எம்பெருமானுர்“

                                              என்றும்

“பிறைதங்கு சடையான வலத்தே வைத்து...“

                                 என்றும் பாடுகிறார்

ஸாமவேத ஸாரம் - எனப்படும் திருவாய்மொழி அருளிய நம்மாழ்வாரும்

“வலத்தனன் திரிபுரம் எரித்தவன், இடம்பெற“ என்பதால் அரியின் வலப்புறத்தே இருப்பது சிவபெருமான் ஆவர். இதிலிருந்து சிவனின் இடப்பாகத்தேயுள்ள உமையே சக்தியே - திருமால் என்பது வெளிப்படை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/17&oldid=1544444" இலிருந்து மீள்விக்கப்பட்டது