ஆத்மஜோதி337
"நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
நாராயணு! நரனே! உன்னை
மாமி தன்மகன் ஆகப் பெற்றல்
எமக்கு வாதை தவிருமே”
என்பதே அவளது குறிக்கோள். தன் அரிய தீவிர
முயற்சியாலும், தன்நம்பிக்கையாலும், அக் குறிக்கோளே
அடைந்தே வெற்றி கண்டாள். இவ்வளவும் தனது பதினைந்து ஆண்டுகளுக்குள்.
ஆத்மீய வாழ்வும், அனுபூதியும் ஆடவர்க்கே உரியது, எளியது என்று நினைக்கக் கூடாது. அது யாவர்க்கும் எளியது, உரியது என்பதை நிரூபித்த ஸ்ரீ ஆண்டாள் தனது அருள் வாழ்வு மூலம் பெண்ணுலகத்திற்கு ஈடு இணையற்ற பெருமையை நல்கி, மங்கையருக்கும் 'முன்வழிகாட்டி’யாய் இலங்குகிறாள். ஆண்டவனை அடைய, அகபுறத்துறவு இன்றியமையாதது என்பது ஆன்றோர் கொள்கை.
இளமை, அழகு ஆத்ம சாதனத்திற்கு முட்டுக்கட்டையாகும் என்ற கருத்தும் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டைகளாக உள்ளவைகளையே, தனக்குரிய சாதனமாகக் கொண்டு ஆண்டாள் வெற்றி பெற்றதே அவளது திறமை, தனது அழகிய பூந்தளிர் மேனி, எழில், இளமை, குழலின் செழுமை ஆகிய இவைகளையே அவள் தன் கருவியாக்கி காதல் எனும் படகில் தன் முயற்சி என்னும் துடுப்பால், எண்ணத்திற்கும் எட்டாத கரையை அணைந்தனள். இது பெண்பாலார்க்கு ஒர் எடுத்துக்காட்டு. பூங்கொடி ஓர் கொழுகொம்பை நாடுவது போலவும், நீர்ப் பெருக்குள்ள ஆறுகடலைநோக்கிப்பாய்ந்தோடுவதுபோலவும்கற்புடையபதி விரதையானவள், தன் பதியை அடைந்து தன்னையே கொடுத்து, தான்' என்பதேயின்றித் தயங்காத தியாகம் செய்கிறாள். இக்குணம் பெண்களுக்கு இயற்கையான விதி. எனவே, ஆண்டாள் தன்னையே, உடல் உயிர், உள்ளம் யாவையும் கண்ணனுக்கேயிட்டாள்.
"பேசுவது ஒன்று உண்டு இங்கு: எம்பெருமான்
பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்
என்னும் இப்பேறு எனக்கு அருளு கண்டாய்”
என்றே ஏங்கி ஏங்கி நின்றாள்.