ஆத்மஜோதி
341
திங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கி பெருஞ் செந்நெல்லுடு கயல் உகளிப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து - ஏலோர் எம்பாவாய்"
என்று-
இப்பாவையில், "உத்தமன் பேர் பாடுவதால்" அகத்துாய்மையும், "நீர் ஆடுவதால்" - புறத்துாய்மையும் கூறி, அத்தகைய பல அனுஷ்டானங்களின் பலனாக.மாதம் மும்மாரி பெய்ய, நாடு செழிக்க செல்வமும் கொழிக்குமாம். மேற்கொண்டு நீங்காத செல்வம் நிறைந்து, என்றால் அதெப்படி? செல்வம் என்பது மாறுபடும் தன்மையது தானே? நிரந்தரமாக நிலைக்காத ஒரு செல்வத்தை நீங்காத செல்வம் நிறைந்து என்றாளே அதன் பொருள் என்ன? ஆத்மீய ஸ்ாதகன், ஒரு குடம் போல, அவனவன் தகுதிக் குத் தக்கபடிதான் எதுவும் கிட்டும். அவன் ஆன்மீக நிறைவை எய்த வேண்டில், பெரிய மஹான்களை அண்டி ஞானோபதேசம் முறைப்படி பெற்றுத்தான் உய்ய வேண்டும். ஆசர்ர்ய சீலர்களே அணுகி, தம் பணிவிடையாலும், பணிவு, அன்பு, தொண்டாலுந்தான் மஹான்களிடமிருந்து ஞானத் தை அடையவேண்டும் என்பதைக் காட்டுகிறாள். "தேங்காதே புக்கிருந்து" - தேங்கி பாசி படர்ந்த குட்டையைப் போலல்லாமல் தனது முன்னேற்றத்தில், நாட்டமுடைய வணாய், சாதகன்; "வள்ளல் பெரும் பசுக்கள்” ஞானவள்ளல்களான மஹாத் மாக் களை - ஆசார்யசீலர்களே, "புக்கிருந்து" - அருகில் சென்று, "சீர்த்த முலே பற்றி வாங்க” பசுவைக் கறப்பது போல, ஆசார்யர்கட்கு தொண்டு செய்து அடையும் உபதேசத்தாலும் அனுக்கிரஹத்தாலும்; குடம் ."நிறைக்கும்" - ஞானம் நிறைய உண்டாகும். "இங்கு, பால் ஞானத்திற்கு உவமையாகக் கூறப்பட்டது. அவ்வாறு அடைந்த பாலைப்போன்றுள்ள தூய ஆன்ம ஞானமே, நீங்காத செல்வமாக் நிறைந்து நிலைத்து நிற்கும்" என்று ஆண்டாள் உபதேசிக்கின்றாள்!! எனவே, ஆசார்ய தொண்டும், பக்தியும், தூய்மையும், இப் பாவையின் உபதேச விருந்தாகிறது!