பக்கம்:ஆத்மஜோதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மஜோதி . х 347

i

  1. தமிழ்ச் செல்வா, . வருகவே

. (unautis) . . . . - х

வையம் புகழும் அறிஞர் திரு

மகனே வருக! மாசகன்ற

தெய்வத் தமிழின் திருவுருவின்

செல்வா வருக! தேன் மணக்கும்

சைவக் கொழுந்தே!. தமிழணங்கின்

• தவத்தின் குவையே! துாய மணி

ஐயா! கி. வா. ஜகந் நாத - அரசே! வருக, வருகவே!! I

ஆய கலைகள் ஆய்ந் துணர்ந்த

அறிவுக் கடலே! அமுத மணத் துாய தமிழின் அருட் சுவையில் -

சொக்கிக் கிடக்கும் கவிக் குயிலே! ஓயாதிரவு பகல் முழுதும்

உயிராம் தமிழுக் குழைத்து வரும் நேயா, வருக! அருள் ஞான

நிறைவே வருக, வருகவே! 2

நீறு பூத்த அழகு துதல்

நிலவு பூத்த திருவதனம் வீறு பூத்த நெஞ் சுறுதி! -

வீரம் பூத்த சொல்லினிமை! மாறு பட்டார் கருத்தை யெலாம்

மணக்கும் தமிழால் நிறைவிக்கும் பேறு பெற்ற அருள் ஞானப் - * , பெரியோய்! வருக, வருகவே!! 3

கங்குல் அகற்றும் ஒளிக்கதிரே!

கருணை பொழியும் விழிச் சுடரே! சங்கப் புலவன் - தமிழ் முருகன், -

தாளை மறவாத் தவக் கொழுந்தே! பொங்கும் சைவத் தமிழ் முழக்கம்

புவனம் அனைத்தும் இசைத்துவரும் சிங்கத் தமிழா! தெய்வ கலைச்

செல்வா! வருக, வருகவே!! 4 雖

甄Ş※娘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/29&oldid=1544637" இலிருந்து மீள்விக்கப்பட்டது