பக்கம்:ஆத்மஜோதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மஜோதி 349 மோனியத்தில் சுர இசை எழுப்பிக் கற்பனேயில் இலயித்து வாசிக்க ஆரம்பித்து விட்டால் சபையோர் மெய்மறந்திருப்பர். இவர் பல இசை மேதைகளின் குரு. மிருதங்க வித்துவான் சிக்கல் ஆர். வடிவேல் துடிப்பான இளைஞர். கடு க்தி வேகத்தில் அவரது கை விரல்கள் மிருதங்க மேடை யிலே நர்த்தனம் செய்கின்றன. முக பாவமும் தாளலயக் கட்டும் ஒன்றிப் பிணைந்து பெரு விருந்தாகின்றன. திரு. எஸ். வாசுதேவராவ் தப்ளாவும் கெஞ்சிராவும் வாசிப்ப திலே சாமர்த்தியசாலி. அவர் அவ் வாத்தியக் கருவிகளி விருந்து எழுப்பும் சுர ஓசை காற்றில் செறிந்து காதின்வழி புகுந்து நெஞ்சத்தை நிறைக்கிறது. உற்சாகமான நபர். இம் மூவரதும் மேதைத் தன்மைகள் மேலும் மேலும் பிரகாசிக்கக் கதிர்காமக் கந்தன் கருணை பாலிப்பானுக.

ஆத்மஜோதி சமயப் பிரச்சார நிறுவனத்தின் அழைப் பையேற்று இலங்கை வந்த பித்துக்குளி, பூரீ முருகதாஸ் சுவாமிகள் ஒரு நல்ல கருத்தைத் தெரிவித்துப் போயுள்ளார். அைைதக் குழந்தைகளை வளர்க்கவும், அவர்களுக்குக் கல்வி கற்பிக்கவும், தகுந்த தொழில் பெறவும், வாழ்விலே உள் ளொளி பெருக்கி ஆனந்தமாய் வாழவும் தாம் இந்தியா விலே தீனபந்து ஆசிரமம்' நிறுவியிருப்பதைப் போன்று இலங்கையிலும் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெறவேண் டும் என்பதும் அதற்கு ஆத்மஜோதி நிறுவனத்தார் உட னடியாக ஈடுபட வேண்டும் என்பதும் அவரது சிந்தனையிற் ருேன்றிய வாக்குகள். பெரியவர்களின் வாக்கு பொய்த்துப் போகாது. அவை நிறைவேறவே செய்யும். அவை தங்கு தடையின்றி நடக்க, அடிக்கடி தாம் இலங்கை வந்து நிதி

யுதவிக்கான இன்னிசைக் கச்சேரிகள் நடாத்த யோசித்தி

ருப்பதாகச் சொன்னதும் உற்று நோக்கற்பாலதாகும்.

பித்துக்குளி பூரீ முருகதாஸ் தாம் செய்த கச்சேரிகள் காரணமாக எல்லாரினதும் பாராட்டுதல்களைப் பெற்றார், பண முடிப்புகள் கிடைத்தன. பொன்னுடைகள் போர்த் தப்பட்டன. ஈழத்து மக்களின் அன்பு வெள்ளச் சுழலில் சிக்கித் தவித்தார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது பாடல்கள் பல கொண்ட தொகுப்புப் பிரசுரமொன்றினை ஆத்மஜோதி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். சுவாமி களின் வரவு இலங்கையிலே உள்ள முருக பக்தர்களுக்கும் ஏனைய அன்பர்களுக்கும் மனதில் புதுத் தெம்பைத் தந்துள் ளது. அது என்றும் வளரும்; நிறைந்து வாழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/31&oldid=1544639" இலிருந்து மீள்விக்கப்பட்டது