பக்கம்:ஆத்மஜோதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.ു 351

பரந்து விரிந்த ஆத்மஞானத்தின் போதத்தையும் மனதின் எல்லையிலாப் பேராற்றலையும் ஒருங்கே தன்ன கத்தே கொண்ட ஒரு உயரிய தெய்வீக உணர்வு நிலயே

அதிமானச் தத்துவமாகும்.

உலக வாழ்க்கைக்கும் ஆத்மீக வாழ்க்கைக்கும் உள்ள பெரும் பிளவை ஒழித்து சமன் வயப்படுத்த வல்ல பேரா

ற்றலுடையது அதிமானச சக்தியே.

அதிமானச மென்றால் என்ன? மனப் பிரான தேக உணர்வு நிலைகளுக்கும் சத்து சித்து ஆனந்த நிலை என்று மாமறைகள் போற்றும் பேருணர்வு நிலைகளுக்கும் இடையே உள்ள ஒர் உணர்வு நிலையே அதிமானசம்; அவசேதனத்தையும் பரிசேதனத்தையும் இணைத்துப் பிணைக்கும் பாலமதுவே, அதிமானச சக்தியின் மூலமாகத்தான் அவசேதனத்தைத் தெய்வீக ரூபாந்திரம் அடையச் செய்து இவ்வுலகில் இறைவன் திருவுள விருப்பம் நிறைவேற, சிறந்த, நடுக்களகைவும் கருவியாகவும் இருக்க முடியும். - - . . . . . . . . . .

உலகிற்கும் இறைவனுக்கும் சித்திற்கும் ஜடத்திற்கும். இவ்வுலக வாழ்க்கைக்கும், ஆத்மீக வாழ்க்கைக்கும் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பை, அத்யாத்ம ஐக்கியத்தை உண்டாக்கும் ஒரு தெய்வீக உணர்வுநிலையே அதிமானசம்.

அதிமானசம் இவ்வுலகில் இயங்கி செயல்புரியும் போது பகைமை, போராட்டம், சுயநலம், தனியுணர்வகந்தை இவற்றால் கவரப்பட்டு அல்லலுறும் தற்கால உலகம் தெய்வீக மாறுதல் அடைந்து புத்தொளியும், புத்தெழிலும் புதுமலர்ச்சியுமுடைய நவ உலகமாக மாறும், நவசமுதாயம் உதயமாகும், எங்கும் இன்பப் பண்ணின் இன்னெலி கேட்கும், மக்கள் இன்பக்களிப்பில் திளைத்து அமரானந்தராய் வாழ்வர், இம்மண்ணகம் விண்ணகமாக மாறும். மனம் , குறுகியது, வரம்பிற்கு உட்பட்டது, தனியுணர் வகந்தையால் பிளவு பட்டது, சம்பவங்களைப் பிரித்து பகுத்துப் பார்ப்பது, உண்மை யறியாதது, பொய்யை மெய்யாகக் காணக்கூடியது, கற்பனை உலகில் சஞ்சரிப்பது, தெளிவாக எதிரிலுள்ளதையும் புரிந்து கொள்ள முடியாதது. ஆசாபாசச் சுழலில் அகப்பட்டு அல்லலுறுவது, தான் வேறு உலகம் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/33&oldid=956304" இலிருந்து மீள்விக்கப்பட்டது