பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 109

அதையும் அவன் மறுக்கவில்லை. அவன் பேசாமலே இருந்தது அவளை வருத்தத்துக்குள்ளாக்கியது. தயங்கித் தயங்கிப் புடவைப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனாள் அவள்.

'காலம்பறப் பாக்கிறேன், துங்குங்கோ' என்று அவள் போகும்போது சொல்லிக் கொண்டு போன வார்த்தைகளுக்கும் அவனிடமிருந்து பதில் இல்லை. அவள் போன் பின், தான் காரணமின்றி அவளை வேதனைப்படுத்தி விட்டோம் என்று உணர்ந்தான் ராஜாராமன். ஆனால் காலதாமதமாக ஏற்பட்ட அந்த உணர்ச்சியினால் ஒரு பயனும் கிட்டவில்லை. என்ன காரணத்துக்காக அவள் மேல் கோபப்பட்டு மெளனம் சாதித்தோம் என்று மறுபடி இரண்டாம் முறையாக யோசித்தபோது, காரணம் தெளிவாகப் புலப்படவில்லை; கோபப்பட்டு விட்டோமே என்ற கழிவிரக்கம்தான் புலப்பட்டது. * . . . " -

மறுநாள் காலையில் விடிவதற்கு முன்பே எழுந்திருந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு, கோவிலுக்குப் போய்விட்டு மறுபடியும் வாசகசாலைக்குத் திரும்பாமல், அங்கிருந்தே கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றான் ராஜாராமன். -

ராஜாராமன் வேலை நிறைய இருக்கிறது. மகா நாட்டுக்கு வேறு அதிக நாள் இல்லே. பல ஏற்பாடுகளைக் கவனிக்கணும். மகாநாடு முடிகிற வரைக்கும் நாலைந்து நாளைக்கு நீ இங்கேயே தங்கிவிட்டால் நல்லது ' என்றார் வரவேற்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவர். ராஜாராமனும் அதற்குச் சம்மதித்துவிட்டான். முத்திருளப்பனுக்கும், குருசாமிக்கும் தகவல் சொல்லி அனுப்பி உண்டியல் வசூல், ஊர்வல ஏற்பாடுகள் செய்வது, தொண்டர் படைக்கு இளைஞர்கள் சேர்ப்பது, எல்லாவற்றையும் கமிட்டி அலுவலகத்தின் மூலமே செய்தான். ஒய்வு ஒழிவின்றி வேலை இருந்தது. மதுரம் என்ன நினைப்பாள், எப்படி எப்படி வேதனைப்படுவாள்