பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 113 ராஜாராமனுடைய முயற்சியால் ஏராளமான இளைஞர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். சத்திய மூர்த்தியின் தலைமைப் பிரசங்கம் பாரதியாருடைய கவிதைகளின் சக்தியையும், ஆவேசத்தையும் வசனத்திற் கொண்டுவந்தாற்

போல அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக அமைந்தது.

மகாநாட்டின் முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தலும் நடைபெற்றது. சக்கரவர்த்தி

ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி, சர்தார் வேதரத்னம்

பிள்ளை, திருவண்ணாமலை அண்ணாமலைப்பிள்ளை ஆகியவர்களுடைய பெயர்கள். பிரேரேபிக்கப் பட்டன

வாயினும், பின்னால் ஒரு சமரசம் ஏற்பட்டது.

ராஜகோபாலாச்சாரியார் தலைவராகவும், சத்தியமூர்த்தி

துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

சர்தாரும், அண்ணாமலைப் பிள்ளையும், வாபஸ் வாங்கிக்

கொண்டார்கள். தேசத் தொண்டர் காமராஜ் நாடார் முதல்

தடவையாகக் காரியக் கமிட்டிக்கும், அகில இந்தியக்

காங்கிரஸ் கமிட்டிக்கும் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்

பட்டார். டாக்டர் டி.எஸ். எஸ். ராஜனும் பக்தவத்சலமும்

காரியதரிசிகளாயின்ர். - . . . . . . . . . : . . . . .

மகாநாடு முடிந்தபின் கமிட்டி அலுவலகம் கலியானம் நடந்து முடிந்த வீடு போலிருந்தது. அப்புறம் இரண்டொரு நாளைக்கு அங்கே வேலைகள் இருந்தன. முத்திருளப்பன், குருசாமி, எல்லோருமே கமிட்டி அலுவலகத்துக்குத்தான் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வாசகசாலையைக் கவனிப்பதற்குப் பத்தர் மட்டும் தான் இருந்தார். மகாநாடு முடிந்த மூன்றாம் நாள் அதிகாலையில் ராஜாராமன் வாசகசாலைக்குப் போய்ப் பத்தரிடம் சாவியை வாங்கி மாடியைத் திறந்த போது மாடியறையில் கோயில் கர்ப்பகிருகத்தின் வாசனை கமகமத்து. தினசரி தவறாமல் அங்கிருந்த படங்களுக்கு மல்லிகைச் சரம் போட்டு ஊதுவத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டு மென்பதை அவன் சுலபமாக உணர முடிந்தது. பின் பக்கத்து மாடியறையில் அப்போது தான். மதுரம் வீணை சாதகம்

ஆ.ரா - 8